இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஓன்றான கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோட்டாக் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்பட்ட நாளில் இருந்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் தற்போது மூத்த அதிகாரி ஒருவர் திடீரென ராஜினாமா செய்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
கோட்டக் மஹிந்திரா வங்கியின் தலைமை இயக்க அதிகாரி (COO) மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) ஆக இருந்த மிலிந்த் நாகூர், 2025 பிப்ரவரி 15 முதல் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இப்பதவியில் இருந்து விலக தனது தனிப்பட்ட காரணங்கள் என கூறி தனது முடிவை எடுத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில் கோட்டக் மஹிந்திரா வங்கியில் சேர்ந்த நாகூர், ஒரு வருடத்திற்கும் மேலாக சிடிஓ பதவியை வகித்தார், பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் சிஓஓ பதவியையும் ஏற்றார். கோட்டக் வங்கியில் சேருவதற்கு முன்பு, 10 வருடத்திற்கு மேலாக சிட்டி குரூப்பில் நிர்வாக இயக்குராக பணியாற்றினார் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஃபின்டெக் நிறுவனமான Early Warning-ல் சிடிஓ பதவியை வகித்தார்.
கோட்டக் மஹிந்திரா வங்கியின் ஐ.டி. அடிப்படை கட்டமைப்பு தொடர்பாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதற்கு மத்தியில் நாகூரின் பதவி விலகியுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கி சேனல்கள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்தது மற்றும் கிரெடிட் கார்டு வழங்கலை நிறுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை இவ்வங்கியின் மீது விதித்தது குறிப்பிட்டத்தக்கது.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் ஐ.டி. அமைப்புகளை ஆய்வு செய்த போது RBI இந்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இந்த கட்டுப்பாடுகள் கோட்டக் மஹிந்திரா வங்கி வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. தற்போது கோட்டக் மஹிந்திரா வங்கி RBI-யின் கட்டுப்பாடுகளை நீக்க தனது டெக் கட்டமைப்பை சரி செய்து வருகிறது. இந்த நிலையில் மிலிந்த் நாகூர்-ன் ராஜினாமா பெரும் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications