இந்தியாவின் மிக முக்கிய தனியார் வங்கிகளில் ஒன்றான கோட்டக் மஹிந்திரா வங்கியின் டிசம்பர் 2019க்கான, காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன.
கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் இந்த டிசம்பர் 2019 காலத்திற்கு ஆயிரத்து 595 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இந்த நிகர லாபம் கோட்டக் மஹிந்திரா வங்கியின் stand-alone கணக்கு மட்டும் தானாம்.

இந்த டிசம்பர் 2019 காலாண்டில், கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் அதிகரித்து இருப்பதற்கு, மற்ற other income என்று சொல்லப்படுகிற மற்ற வருவாய் அதிகரித்து இருப்பது மற்றும் வரி செலவுகள் குறைந்து இருப்பதை ஒரு முக்கிய காரணமாக சொல்கிறார்கள்.
கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிகர வட்டி வருமானம் 17.2 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இது டிசம்பர் 2018 காலத்துடன் ஒப்பிட்டு வந்த கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிசம்பர் 2019 காலத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிகர வட்டி வருமானம் 3,429 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2019 காலண்டில் ஈட்டிய நிகர வட்டி வருமானத்தை விட டிசம்பர் 2019 காலாண்டில் ஈட்டிய நிகர வட்டி வருவாய் 2.4 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம்.
கோட்டக் மஹிந்திரா வங்கியின் அதர் இன்கம் என்று சொல்லப்படுகிற மற்ற வருவாய்கள், சுமார் 37 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். டிசம்பர் 2018 காலாண்டில் ஈட்டிய மற்ற வருவாயை விட 37% அதிகமாக இந்த டிசம்பர் 2019 காலண்டில் ஈட்டி இருக்கிறார்களாம்.
டிசம்பர் 2019 காலண்டில், கோட்டக் மஹிந்திரா வங்கியின் மற்ற வருவாய் 1,341 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகள் என்றால் வாராக்கடன் இல்லாமலா..? கோட்டக் மஹிந்திரா வங்கியிலும் வாராக் கடன்கள் இந்த டிசம்பர் 2019 காலாண்டில் அதிகரித்து இருக்கின்றதாம். கோட்டக் மஹிந்திரா வங்கியின் (Gross NPA) தோராய வாராக் கடன்கள் டிசம்பர் 2019 காலாண்டில் 2.46 சதவீதமாக அதிகரித்து இருக்கிறதாம். கடந்த செப்டம்பர் 2019 காலங்களில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் தோராய வாரா கடன் 2.32 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications