மும்பை: கோடக் மகேந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக் மும்பையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடியிருப்புகளை வாங்கி இருக்கிறார். ஒரு சதுர அடிக்கு இவர் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
மும்பையில் வார்லி சீ ஃபேஸ் (Worli Sea Face) என்ற பகுதி மிகவும் புகழ்பெற்ற பகுதியாக இருக்கிறது. இந்த பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை மொத்தமாக 400 கோடி ரூபாய் கொடுத்து உதய் கோடக் வாங்கி இருக்கிறார். இந்தியாவில் இதுவரை நடைபெற்ற சொத்து பரிமாற்றத்திலேயே இதுதான் அதிக மதிப்பு கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கே இருக்கும் இரண்டு அடுக்கு குடியிருப்புகள் அனைத்தையுமே விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்.

ஒரு சதுர அடி விலை 2. 72 லட்சம் ரூபாய் என்ற விலைக்கு உதய் கோடக் கையகப்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. வார்லி பேஸ் பகுதியில் மொத்தம் இருந்த 11 அடுக்குமாடி குடியிருப்புகளையும் உதய் கோடக் குடும்பம் வாங்கி இருக்கிறது.
கடந்த 30 ஆம் தேதி இதற்கான பத்திரப்பதிவு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்த பகுதி முழுவதுமே உதய் கோடக் குடும்பத்தினருக்கு சொந்தமானதாக மாறி உள்ளது.
இந்த குடியிருப்பில் அதிகபட்சமாக 1396 சதுர அடி கொண்ட வீடு தான் பெரிய வீடு என தெரியவந்துள்ளது. இது மட்டும் 38.24 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல 173 சதுர அடி கொண்டதுதான் சிறிய வீடு என்றும் இது 4.7 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை கடல் பகுதியை நோக்கி இருக்கக்கூடிய இந்த குடியிருப்புக்கு அருகிலேயே இருக்கும் மற்றொரு வீட்டினை 2018 ஆம் ஆண்டு கோடக் குடும்பம் கையகப்படுத்தியது.
கடந்த 2018ஆம் ஆண்டு உதய் கோடக் குடும்பம் இந்த கட்டிடத்தை 385 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இந்த இரண்டையும் இணைத்து உதய் கோடக் குடும்பம் பெரிய குடியிருப்பை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் உதய் கோடக் கடந்த 2024 அக்டோபர் மாத நிலவரப்படி 14.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கிறார். இவர் இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் 148 வது இடத்தில் இவர் இருக்கிறார்.
தற்போது ஒரு சதுர அடிக்கு இவர் 2.72 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பது தேசிய அளவில் சாதனையாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் மும்பையில் ஒரு சதுர அடி 2.25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தான் சாதனையாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications