மத்திய அரசு வரி வசூல் அளவை அதிகரிக்கவும், வரியை அரசுக்கு செலுத்த மக்களுக்குப் பல வழிகளை உருவாக்கி வரும் நிலையில் தற்போது முதல் முறையாக ஒரு தனியார் வங்கியான கோட்டாக் மஹிந்திரா வங்கிக்கு வருமான வரி, ஜிஎஸ்டி உட்பட அனைத்து நேரடி மற்றும் மறைமுக வரியை தனது வங்கி நெட்வொர்க் மூலம் வசூலிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கோட்டாக் மஹிந்திரா வங்கி
இதன் மூலம் கோட்டாக் மஹிந்திரா வங்கி இனி தனது வங்கி கிளைகளில் அனைத்து விதமான அரசு வரிகளையும் வசூலிக்க முடியும். இது வரி வசூலில் மத்திய அரசுக்கும் தனியார் அமைப்புக்கும் மத்தியில் மிகப்பெரிய கூட்டணியாக உள்ளது.
நிர்மலா சீதாராமன் ஒப்புதல்
அரசு தொடர்பான சேவைகளில் அனைத்து வங்கிகளும் பங்குபெற வேண்டும் என்ற திட்டத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாகத் தனியார் வங்கி பிரிவில் நேரடி மற்றும் முறைமுக வரியை வசூல் செய்யக் கோட்டாக் மஹிந்திரா வங்கிக்கு மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார்.
வரி வசூல்
வரி வசூல் சேவைக்கான தொழில்நுட்ப இணைப்புகளைக் கோட்டாக் மஹிந்திரா வங்கி உடன் செய்யப்பட்ட பின்பு, இவ்வங்கி வாடிக்கையாளர்கள் நேரடியாகத் தங்களது நேரடி வரி மற்றும் மறைமுக வரியை செலுத்த முடியும்.
வங்கி வாடிக்கையாளர்கள்
இதுமட்டும் அல்லாமல் வங்கி வாடிக்கையாளர்கள் வரியை கோட்டாக் மஹிந்திரா வங்கியின் மொபைல் பேங்கிங் அல்லது நெட் பேங்கிங் வாயிலாக வீட்டில் இருந்தபடியே எளிதாக செய்யலாம். இல்லையெனில் கோட்டாக் மஹிந்திரா வங்கி கிளைக்கு நேரடியாகச் சென்று கூட வரியை செலுத்தலாம்.
வர்த்தகம் மற்றும் தனிநபர் வரி
இப்புதிய சேவை மூலம் தனியார் வங்கி வாடிக்கையாளர்கள் மிகவும் எளிதாகத் தங்களது வர்த்தகம் மற்றும் தனிநபர் வருமானத்திற்கு வரியை செலுத்த முடியும். மேலும் மத்திய அரசு கோட்டாக் மஹிந்திரா வங்கிக்குக் கொடுத்துள்ள இந்த அனுமதியைப் பார்க்கும் போது அரசு இவ்வங்கி மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கோட்டாக் மஹிந்திரா வங்கி - தீபக் குப்தா
இதுகுறித்து கோட்டாக் மஹிந்திரா வங்கியின் இணை நிர்வாகத் தலைவர் தீபக் குப்தா கூறுகையில், மத்திய அரசு நேரடி மற்றும் மறைமுக வரியை வசூலிக்கக் கோட்டாக் மஹிந்திரா வங்கிக்கு அனுமதி அளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது. இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வரி செலுத்த எளிய வகையில் சேவை அளிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
கோட்டாக் மஹிந்திரா வங்கி பங்குகள்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் கோட்டாக் மஹிந்திரா வங்கி பங்குகள் 0.45 சதவீத சரிவைப் பதிவு செய்து 1,982.65 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 2,008.85 வரையில் கோட்டாக் மஹிந்திரா வங்கி பங்குகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications