கடன் தொகையை விட கூடுதலாக வசூல் செய்த கோடக் மகேந்திரா வங்கிக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தொழில்முனைவோராக இருக்கிறார். இவர் கோடக் மகேந்திரா வங்கியில் கடந்த 2007ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டை அடமானம் வைத்து 1.5 கோடி ரூபாயை கடனாக வாங்கி உள்ளார். இந்த நிலையில் அவர் தன்னுடைய கடன் முதிர்வு காலம் முடிவதற்கு முன்பாகவே, கடன் வாங்கிய அடுத்த ஆண்டிலேயே டிமாண்ட் டிராஃப்ட் வாயிலாக 1.70 கோடி ரூபாயை செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு பின் செல்வராஜின் ஆடிட்டர் கணக்கு பார்த்த போது, செல்வராஜ் வாங்கிய கடனை விட 14 .3 லட்சம் ரூபாயை கூடுதலாக செலுத்தியிருக்கிறார் என்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து செல்வராஜூம் அவருடைய ஆடிட்டரும் கடன் வாங்கிய வங்கிக்கு சென்றுள்ளனர். அப்போது வங்கியின் நிர்வாகம் தரப்பில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர் . ஆனால் பலமுறை அவர் சென்று வந்தும் கோடக் மகேந்திரா வங்கி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனை அடுத்து அவர் ஆர்பிஐயின் குறை தீர்ப்பாளரை நாடி உதவி கோரியுள்ளார். ஆனால் அவர் இந்த கடன் பிரச்சனையில் குறை தீர்ப்பாளரை அணுகுவதற்கான கால அளவு முடிந்துவிட்டது என கூறி அவருடைய புகாரை ஆர்பிஐ குறை தீர்ப்பாளர் ஏற்க மறுத்திருக்கிறார். என்ன செய்வதென்று அறியாமல் குழம்பிப்போன செல்வராஜ் 2018 ஆம் ஆண்டு சென்னை காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கானது மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவின் கீழ் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மத்திய குற்றப் பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மோசடி தொடர்பாக 2006ஆம் ஆண்டு வங்கி அதிகாரிகளாக இருந்து நாராயணன் , ஆனந்தன் உள்ளிட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் . எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அரசு சார்பாக தகுந்த ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளுடன் வங்கி செல்வராஜிடம் இருந்து கூடுதலாக பணத்தை வசூல் செய்தது நிரூபிக்கப்பட்டது.
இதனை அடுத்து எழும்பூர் நீதிமன்றம் கோடக் மகேந்திரா வங்கிக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்த 20 லட்சம் ரூபாயில் 10 லட்சம் ரூபாயை புகார் தாரரான செல்வராஜிக்கு நிவாரண தொகையாகவும் 10 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் அபராத தொகையாகவும் செலுத்த வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications