இந்திய வங்கி துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வரும் திட்டத்துடன் 38 ஆண்டுகளுக்கு முன்பு உதய் கோடக் நிறுவிய ஒரு நிறுவனத்தில் இருந்து MD மற்றும் CEO பதவியில் இருந்து சனிக்கிழமை விலகினார்.
உதய் கோடக் தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள ஆர்பிஐ, செபி உடன் பல வருடமாக விதிமுறைகளை பயன்படுத்தி நினைத்ததை சாதித்து வந்த நிலையில், தற்போது அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே இப்பதிவியில் இருந்து விலகியது வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

1985 இல் ஒரு புறாகூண்டு அலுவலகத்தில் துவங்கிய கோட்டாக் மஹிந்திரா தற்போது 3.5 லட்சம் கோடி நிதியியல் சூப்பர்மார்கெட் ஆக உயர்ந்துள்ளது. கோடக் மஹிந்திரா வங்கி இந்திய வங்கிகளில் சந்தை மதிப்பின் அடிப்படையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக், தனது பதவிக்காலம் முடிவதற்குள் எம்.டி மற்றும் சி.இ.ஓ., பதவியில் இருந்து விலக முக்கிய காரணமாக கூறுவது தனது பதவி மற்றும் பொறுப்புகளை எவ்விதமான பிரச்சனையும் இல்லாமலும், குழப்பம் இல்லாமல் கைமாற்ற வேண்டும் என்ற இலக்குடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கோடக் மஹிந்திரா வங்கியின் அடையாளமாக விளங்கிய உதய் கோடக் பதவி விலகியதாக அறிவித்த நிலையில், இன்று கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் 0.04 சதவீதம் சரிந்து 1770.55 ரூபாயாக மட்டுமே உள்ளது. இன்று சென்செக்ஸ் 174.66 புள்ளிகள் அதிகரித்து 65,566.94 புள்ளிகளை எட்டியுள்ளது.
உதய் கோடக்-ன் 38 வருட நிர்வாகத்தில் பல கூட்டணி நிறுவனங்கள், பல வர்த்தகம் கைப்பற்றல் மூலம் பல பங்குதாரர்களை பெரும் பணக்காரர்களாகியுள்ளார். இந்த நிலையில் கோடக் மஹிந்திரா வங்கியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கியில் உதய் கோடக் மகனான ஜெய் கோட்டாக் முக்கிய உயர் பதவியில் இருக்கும் வேளையில், இவர் தான் அடுத்த தலைவரா என கேட்டபோது, ஜெய் கோட்டாக் ஒரு சிறப்பான ஊழியர் அவருடைய பதவி உயர்வு, பொறுப்புகளை வங்கி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
செப்டம்பர் 1 அன்று, கோடக் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக உதய் கோடக் அறிவித்தார். இதை தொடர்ந்து கோடக் மஹிந்திரா வங்கியின் இணை நிர்வாக இயக்குநரான தீபக் குப்தா இப்பதவியில் நியமிக்கப்பட்டார்.
ரிசர்வ் வங்கி மற்றும் வங்கி உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு டிசம்பர் 31 வரை குப்தா எம்.டி மற்றும் சி.இ.ஓ.வின் பணிகளை மேற்கொள்வார். தற்போது சிஇஓ பதவிக்கு ஜெய் கோட்டாக் உட்பட கேவிஎஸ் மணியன் மற்றும் சாந்தி ஏகாம்பரம் ஆகியோர் போட்டிப்போடலாம்.


Click it and Unblock the Notifications