இந்தியாவில் செயல்படக்கூடிய அனைத்து வங்கிகளுமே தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் நடக்கக்கூடிய பண பரிவர்த்தனைகள் குறித்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் எஸ்எம்எஸ் வாயிலாக தொடர்ச்சியாக தகவல்களை அனுப்பிய வண்ணம் இருக்கிறது.
யுபிஐ பரிமாற்றம், neft, rtgs, டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் என நம்முடைய அக்கவுண்டில் எந்த ஒரு பண பரிமாற்றம் நடந்திருந்தாலும் உடனடியாக எஸ்எம்எஸ் மூலம் நமக்கு தகவல் வந்துவிடும் . நாம் வழங்கி இருக்கக்கூடிய மொபைல் எண்ணில் நம்முடைய வங்கி கணக்கில் நடைபெறும் அனைத்து பரிமாற்றங்கள் குறித்தும் அலெர்ட்டுகள் வருகின்றன.

இந்த சூழலில் இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியாக செயல்பட்டு வரக்கூடிய கோடக் மகேந்திரா வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்கள் இதுபோன்ற பரிவர்த்தனை தொடர்பான எஸ்எம்எஸ்-களை பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. கோடக் மகேந்திரா வங்கியை பொருத்தவரை சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்சம் மினிமம் பேலன்ஸாக 10,000 ரூபாயை வைத்திருக்க வேண்டும்.
மினிமம் பேலன்ஸாக 10,000 ரூபாயை பராமரிக்காமல் இருக்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டணம் டிசம்பர் முதல் வசூல் செய்யப்படும். அதாவது மினிமல் பேலன்ஸை பராமரிக்காத கணக்குகளுக்கு ஒரு மாதத்தில் 30 எஸ்எஸ்எம்கள் மட்டுமே இலவசமாக அனுப்பப்படும். அதனை கடந்து நடக்கும் டிரான்ஸாக்சன் குறித்து எஸ்எம்எஸ்-கள் பெற டிசம்பர் 1ஆம் தேதி முதல் ரூ. 0.15 கட்டணமாக பிடித்தம் செய்யப்படும்.

கோடக் மகேந்திரா வங்கி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு மாதத்திற்கு 30 எஸ்எம்எஸ் அலர்ட்டுகள் அனைவருக்கும் இலவசமாக உண்டு . ஒரு வேளை உங்களுடைய கணக்கில் நீங்கள் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காமல் இருந்தால் குறிப்பிட்ட அந்த மாதத்தில் 30 எஸ் எம் எஸ்- ஐ தாண்டி உங்களுக்கான ஒவ்வொரு எஸ்எம்எஸ்க்கும் ரூ. 0.15 கட்டணமாக வசூல் செய்வோம் என தெரிவித்திருக்கிறது.
யுபிஐ, நெட் பேங்கிட்ங், ஆர்டிஜிஎஸ், வங்கிக்கு சென்று பணம் எடுப்பது, ஏடிஎம்மில் பணம் எடுப்பது, செக் டெபாசிட் செய்வது , டெபிட் கார்டுகளை பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்குமான எஸ்எம்எஸ் அலர்ட்டுகளுக்கும் இந்த கட்டணம் பொருந்தும் என தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்எம்எஸ் அலர்ட்டுகள் மிகவும் முக்கியமானவை. யாரேனும் மோசடியாக நம் கணக்கில் இருந்து பணம் எடுத்தால் கூட இந்த எஸ்எம்எஸ் அலர்ட்டுகள் மூலம் நம்மால் எளிமையாக தெரிந்து கொள்ள முடியும். எனவே எஸ்எம்எஸ் அலர்ட்டுகள் நம் வங்கி கணக்குகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. ஆனால் மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் அதற்கு கட்டணம் என்பது தான் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications