அதானி-ஹிண்டன்பர்க் சர்ச்சையில் இன்று பெரும் புயலே அடித்துள்ளது, அமெரிக்க ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்திற்கு செபி ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது மூலம் பெரும் பூகம்பம் வெடித்துள்ளது.
அதானி குழுமத் தனது நிறுவனப் பங்குகளின் விலையை உயர்த்த முறைகேடான வழிகளை பயன்படுவதாகவும், வெளிநாட்டுப் போலி நிறுவனங்கள் மூலம் பெரும் தொகையைத் திருப்பிவிட்டு அதன் சொந்த பங்குகளையே வாங்குகிறது என பல குற்றச்சாட்டுகளை அடுக்கி 2023 ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை அதானி குழுமத்தின் அடிமட்டத்தையே ஆட்டியுள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்திற்குச் செபி ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது மூலம் மீண்டும் இப்பிரச்சனை வெடித்துள்ளது மட்டும் அல்லாமல் இந்த பிரச்சனைக்கு மத்தியில் கோடா மஹிந்திரா வங்கியும் சிக்கியுள்ளது.
சக்திவாய்ந்த நபர்கள்: ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் செய்த ஊழல் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்துபவர்களை அமைதியாக்கும் மற்றும் மிரட்டும் முயற்சியாகவே செபி ஷோகாஸ் நோட்டீஸ்-ஐ எங்களுக்கு அனுப்பியுள்ளது.
மோசடியாளர்கள் மீது தான் செபி போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என பலரும் நினைக்கலாம். ஆனால் இங்கு மாறாக, செபி இத்தகைய மோசடி நடைமுறைகளை வெளியுலகத்திற்குக் கொண்டு வருபவர்கள் மீது செபி அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தெரிவித்துள்ளது.
கோடாக் வங்கி எப்படி வந்தது: இதற்கு ஏற்றார் போல் செபி தனது விசாரணையில் இதுவரையில் கோடாக் வங்கியின் பெயரை பதிவிடவில்லை என்பது முக்கியமாகக் கேள்வியாக எழுந்துள்ளது. சரி அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் கோடாக் மஹிந்திரா தலையீடு என்ன..?
கோடாக் வங்கி செய்தது என்ன?: ஹிண்டன்பர்க் ரிசர்ச் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், செபி அனுப்பிய நோட்டீஸ்-ல் நாங்கள் அதானி பங்குகள் மீது ஷாட் செய்து மோசடி செய்ததாக அறிவித்தது. இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாகப் பதில் அளிக்க வேண்டியுள்ளோம்.
செபி அனுப்பியுள்ள 46 பக்க நோட்டீஸ்-ல், அதானி பங்குகளை ஷாட் செய்ததற்காக எங்களிடம் விளக்கம் கேட்டுள்ளது. நாங்கள் ஒரு முதலீட்டு பங்குதாரருடனான (investor partner) ஒப்பந்தம் வாயிலாகவே அதானி பங்குகளை ஷாட் செய்தோம். இந்த முதலீட்டுப் பங்குதாரர், இந்தியாவைச் சார்ந்தவர் அல்ல, இவர் வெளிநாட்டு நிதி அமைப்பின் கீழ் கணக்கை வைத்திருந்தார்.
இந்த கட்டமைப்பின் கீழ் தான் ஜனவரி 2023ல் அதானி பங்குகள் ஷாட் செய்யப்பட்டது, எனவே ஹிண்டன்பர்க் நேரடியாக அதானி பங்குகளில் ஷாட் செய்யவில்லை. கோடாக் மஹிந்திரா வங்கி உருவாக்கிய ஒரு ஆப்ஷோர் பண்ட் கணக்கை எங்களுடைய முதலீட்டு பார்ட்னர் பயன்படுத்தினார். உதய் கோடாக் தலைமையிலான கோடாக் வங்கி தான் இந்த கணக்கை உருவாக்கி, அதானி குழுமத்தின் ஷாட் செய்யப்பட்ட பங்குகளை நிர்வாகம் செய்தது எனவும் ஹிண்டன்பர்க் தெரிவித்தது.
இந்த நிலையில் முதலீட்டு பங்குதார் உடனான ஹிண்டன்பெர்க் ரிசர்ச் செய்ய ஷாட்டிங் மூலம் 4.1 மில்லியன் டாலர் மொத்த வருவாய் ஈட்டியதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், அதானி நிறுவனத்தின் அமெரிக்க பத்திரங்களில் தான் ஹிண்டன்பர்க் நேரடியாக ஷாட்டிங் பெட் வைத்திருந்தது, இதன் மூலம் வெறும் 31,000 டாலர் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளதாகக் ஹிண்டன்பர்க் கூறியுள்ளது.
பிரச்சனையின் ஆரம்பம்: ஹிண்டன்பர்க் நிறுவனம், செபி விசாரணையில் கோடாக் வங்கியையோ அல்லது கோடாக் வங்கியின் இயக்குழு உறுப்பினர்களையோ குறிப்பிடவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், "செபி கோடாக் வங்கியையோ அல்லது வேறு எந்த கோடாக் வங்கி இயக்குழு உறுப்பினரையோ குறிப்பிடாமல் இருப்பது, மற்றொரு செல்வாக்குமிக்க இந்திய தொழிலதிபரை விசாரணையின் பார்வையிலிருந்து காப்பாற்றுவதற்காக செபி எடுத்திருக்கும் முடிவாக இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்." என்று ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.
SEBI தவறு செய்ததா?: செபி தனது விசாரணை அறிக்கையில் K-India Opportunities fund மற்றும் KMIL என்ற பெயரை மட்டுமே குறிப்பிட்டு உள்ளது. Kotak என்ற பெயரை K என திருத்தியுள்ளது. KMIL என்பது கோடாக் மஹிந்திரா இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட், இது ஒரு அசர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமாகும். இதேபோல் ஹிண்டன்பெர்க் K-India Opportunities fund அல்லது KMIF ஆகியவற்றுக்கு எந்த காலத்திலும் உறுப்பினராகவோ, அல்லது சேவை பெற்றதும் இல்லை என தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு செபி அமைத்த corporate governance குழுவிற்கு தலைமை தாங்கியவர் கோடாக் வங்கியின் நிறுவனர் உதய் கோடாக் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications