செருப்பு தயாரிப்பு டூ டிரோன்.. தமிழ்நாட்டில் மாஸ்காட்டும் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்..!

சென்னை: தமிழ்நாட்டில் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு காலணி தயாரித்து ஏற்றுமதி செய்வதிலும், தொழிற்சாலையில் அதிகப்படியான பெண்களை நியமித்து தொழிற்துறையில் பெரும் புரட்சி செய்துள்ள கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் புதிய பங்குதாரரின் ஆதரவுடன், பல்வேறு துறைகளில் இறங்க முடிவு செய்துள்ளது மட்டும் அல்லாமல் அதிரடியான விரிவாக்கத் திட்டங்களை உருவாக்கியுள்ளது என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தனது உற்பத்தித் திறனை விரிவுபடுத்தி, ஏற்றுமதியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது காலணி உற்பத்தி நிறுவனமான JR One Footwear தமிழ்நாட்டில் இரண்டு புதிய உற்பத்தி தொழிற்சாலை மற்றும் தோல் பாகங்களைத் தயாரிக்கும் கிளஸ்டர்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கடந்த வாரம் தகவல் வெளியானது. JR One Footwear என்பது கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப் மற்றும் தைவான் நாட்டின் ஷூடவுன் இணைந்து உருவாக்கிய ஒரு கூட்டணி நிறுவனமாகும்.

செருப்பு தயாரிப்பு டூ டிரோன்.. தமிழ்நாட்டில் மாஸ்காட்டும் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்..!


இந்த நிலையில் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனம் வரும் ஆண்டுகளில் காலணிகள், உரங்கள், உணவு, டிரோன் தொழில்நுட்பம், சிந்தடிங் டெக்ஸ்டைல், சோலார் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று இந்நிறுவனத்தின் துணை தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஜே.ரபிக் அகமது தெரிவித்தார்.

ரபிக் அகமது 2018 ஆம் ஆண்டில் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷனின் துணை தலைவரும், நிர்வாக இயக்குனர் ஆனார், 2014 ஆம் ஆண்டில் ஸ்டீல் வணிகத்தில் இருந்த பிறகு முதலீட்டாளராக மாறியாதாக கூறும் அகமது தற்போது இந்நிறுவனத்தில் 47.08 சதவீத பங்கு வைத்துள்ளார். இவரின் ஓப்பன் ஆஃபர் முடிந்தால் இக்குழுமத்தில் இவரின் பங்கு இருப்பு 73.07 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

கோத்தாரி இண்டஸ்ட்ரியல் நிறுவனத்திற்கான திட்டங்களை விவரித்த ரபிக் அகமது, நாங்கள் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைய திட்டமிட்டு உள்ளோம், கோத்தாரி குழுமம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என உறுதி அளித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் கோத்தாரி குழும் விவசாய உரங்களில் இருந்ததை தொடர்ந்து, இத்துறையில் மீண்டும் பெரிய அளவில் இறங்க வேண்டும் என்பதற்காக கத்தார் நாட்டில் அமைந்துள்ள ஷேக் ஃபலாக் பின் ஜாசின் பின் ஜபூர் அல் தானி உடனான கூட்டணியில் அந்நாட்டில் ஒரு விவசாய உர ஆலை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். கத்தாரில் உர ஆலை அமைக்க மொத்த திட்டச் செலவு சுமார் ரூ. 7,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

உரத் தொழிலைத் தவிர, தமிழ்நாட்டில் தோல் அல்லாத காலணிகளை தயாரிக்க இரண்டு தொழிற்சாலைகளை அமைக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் இதுக்குறித்த தகவலை உறுதி செய்தது.

தற்போது, கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் இந்தியாவில் க்ரோக்ஸ் மற்றும் கிக்கர்ஸ் பிராண்ட் காலணிகளை தயாரித்து விநியோகிப்பதற்கான ஒப்பந்தங்களை செய்து, பெரம்பலூரில் ஒரு தொழிற்சாலையை வைத்துள்ளது.

ரபிக் அகமது தொடர்ந்து பேசுகையில் எங்கள் நிறுவனம் தற்போது உணவு மற்றும் டிரோன் தொழில்நுட்ப வணிகத்தில் அதிரடியாக சென்று கொண்டு இருக்கிறோம், ஏனென்றால் விவசாய சமூகத்தின் மத்தியில் டிரோன்களுக்கான தேவை மிக அதிகமாக இருந்தது. "நாங்கள் மதுரையில் முதல் டிரோன் பயிற்சிப் பள்ளியை அமைத்துள்ளோம். தமிழ்நாட்டில் மாவட்டங்கள் முழுவதும் அமைக்க திட்டங்கள் உள்ளன. பின்னர் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய விரும்புகிறோம்" என்று அவர் கூறினார். நாட்டில் டிரோன் ஆபரேட்டர்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது.

கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் தற்போது பல திட்டங்களை தனது வரிசையில் வைத்துள்ள நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதற்காக மொத்தம் ரூ. 16,000 கோடி முதல் ரூ. 17,000 கோடி வரை செலவு செய்ய உள்ளோம் என்றும் ரபிக் அகமது தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+