பெரும் பணக்காரர்கள் வாழ்க்கை எப்போதும் ரகசியமும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும். அந்த வகையில் 91 வயதில் மீண்டும் காதலில் விழுந்துள்ளார் கோடீஸ்வரரான கே.பி.சிங். யார் இவர்..?
கே.பி.சிங் இவரது மனைவி இந்திரா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறைந்தார், 2018 ஆம் ஆண்டு தனது மனைவி உயிரிழந்ததை அடுத்து, கேபி.சிங் சில ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் காதலில் இருப்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ், டெஸ்லா எலான் மஸ்க் போன்ற பல பில்லியனர்கள் 50 வயதை கடந்து விவாகரத்து பெற்று புதிய காதல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது 91 வயதில் கேபி சிங் காதலில் விழுந்துள்ளார்.
காதலி பெயர் ஷீனா
கேபி சிங் தனது புதிய காதல் குறித்து பேட்டியில் பேசுகையில் அவள் பெயர் ஷீனா. இப்போது என் வாழ்க்கையில் இருக்கும் முக்கியமான மற்றும் சிறந்த மனிதர்களில் அவளும் ஒருத்தி. அவள் மிகவும் ஆற்றல் மிக்கவள், அவளுக்கு உலகம் முழுவதும் பல அற்புதமான நண்பர்கள் உள்ளதால், அவர்கள் உடன் நானும் செல்கிறேன். நான் சோர்வாக உணரும் போதெல்லாம், அவள் என்னை ஊக்குவிப்பாள் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
குஷல் பால் சிங்
குஷல் பால் சிங் என்ற பெயரின் சுருக்கம் தான் கே.பி.சிங் இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பர் ஆவார். இவர் டிஎல்எஃப் லிமிடெட் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். 2008 ஆம் ஆண்டு கேபி.சிங் ஃபோர்பஸ் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் எட்டாவது இடம் பிடித்தார்.
உத்திர பிரதேசம்
நவம்பர் 15, 1931 ஆம் ஆண்டு பிறந்த கேபி.சிங் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். ஆரம்ப கால பள்ளி படிப்பை சிறிய மதரசாவில் பயின்ற கேபி.சிங் அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பை மீரட் கல்லூரியிலும் அதன் பின் இங்கிலாந்தில் ஏரோனாடிக்கல் என்ஜினியரிங்கும் பயின்றார்.
டி.எல்.எஃப். யுனிவர்சல் லிமிடெட்
இங்கிலாந்து செல்லும் முன் கேபி.சிங் குதிரையை ஓட்டுவதற்கான பயிற்சியை எடுத்துக் கொண்டார். இதன் வாயிலாக 1951 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் தேர்வு செய்யப்பட்டார் கேபி.சிங். இதை தொடர்ந்து 1960ல் அமெரிக்கன் யூனிவர்சல் எலக்ட்ரிக் கம்பெனியில் சேர்ந்தார், 1979 ஆம் ஆண்டு டி.எல்.எஃப். யுனிவர்சல் லிமிடெட் உடன் இணைந்தது. ராகவேந்திர சிங் உடன் இணைந்து கே.பி.சிங் டி.எல்.எஃப் லிமிடெட் உடனான தனது பணியை துவங்கினார்.
ராகவேந்திர சிங்
கேபி சிங், டிஎல்எஃப் லிமிடெட் நிறுவனர் ராகவேந்திர சிங்கின் மகள் இந்திரா சிங்கை மணந்தார். கே.பி. சிங்கிற்கு ராஜீவ் சிங் என்ற ஒரு மகனும், ரேணுகா தல்வார் மற்றும் பியா சிங் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
10,255 ஏக்கர் நிலம்
கே.பி.சிங் தலைமையிலான டி.எல்.எஃப் நிறுவனம் மொத்தம் 10,255 ஏக்கர் நிலத்தை வைத்துள்ளது. இதில் குருகிராமில் மட்டும் 3000 ஏக்கர் நிலங்களை வைத்திருக்கிறது. டி.எல்.எஃப் சிட்டி என்னும் மாபெரும் திட்டத்தை உருவாக்கிய கேபி.சிங் சொத்து மதிப்பு தற்போது 66000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.
கேபி.சிங் திறன்
குருகிராமில் நிலநடுக்கங்களை தாங்கும் பல்வேறு அலுவலகங்கள், குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் சொகுசு கட்டிடங்களை உருவாக்கியதில் கேபி.சிங் பங்கு பெருமளவில் உள்ளது. இந்தியாவுக்கு ஜெனரல் எலெக்ட்ரிக்ஸ் நிறுவனத்தை கொண்டு வந்தவர்களில் முதன்மையானவராக கேபி.சிங் பார்க்கப்படுகிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications