இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை எண்ணிக்கையை தாண்டி அனைவராலும் மிகவும் விரும்பப்படும் SUV கார்களில் ஒன்றாக இருப்பது மஹிந்திரா தார். இந்த காரை வைத்திருப்பதே கெத்து தான் என்ற நிலை இந்திய இளைஞர்கள் மத்தியில் உள்ளது.
மஹிந்திரா தார் கார்களுக்கு இந்திய மக்களுக்கும் கிரேஸ்-ஐ புரிந்துக்கொண்டு இந்நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு 2வது தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தியதில் இருந்து, மஹிந்திரா தார் புகழின் உச்சக்கு சென்றது. குறிப்பாக பெரு நகரங்கள் முதல் கிராமங்கள் வரையில் புதிய மஹிந்திரா தார் காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மஹிந்திரா தார் கார்கள் அதிகப்படியானோர் வாங்கவில்லை என்றாலும் சாலையில் இந்த கார் செல்லும் போது ஆண்கள், பெண்கள் வயது வித்தியாசம் இல்லாமல் திரும்பி பார்க்கும் ஒரு காராகவே உள்ளது. இதுவும் கருப்பு கலரில், பெரிய அலாய் வீல் உடன் வந்தால்.. கேட்கவே வேண்டாம்.
மஹிந்திரா தார் உண்மையிலேயே இந்தியாவில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் பழைய மஹிந்திரா தார் மாடல் கார்களில் இன்றைய நவீன வாழ்க்கை முறைக்கு தேவையான சில முக்கிய விஷயங்கள் இல்லாததால், அது மக்களின் விருப்பமில்லா காராக இருந்தது. ஆனால் மஹிந்திரா 2வது தலைமுறை தார் காரில் இதை களையெடுத்துள்ளது. அதற்கான பெருமை, கிருபா ஆனந்தன் என்பவரையே சாரும்.
ஐஐடி பாம்பே முன்னாள் மாணவர் கிருபா ஆனந்தன் தலைமையிலான குழு தான் மஹிந்திரா தார் 2வது தலைமுறை காரை வடிவமைத்தது. கிருபா அனந்தன் இந்திய ஆட்டோமொபைல் துறையில் மிகவும் அறியப்பட்ட முகம் தான், சுமார் 27 வருடமாக இந்திய ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றி வருகிறார்.
மஹிந்திரா தார், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகிய மூன்று பிரபலமான மஹிந்திரா தயாரிப்புகள் மூலம் SUV பிரிவில் மஹிந்திரா புரட்சியை ஏற்படுத்தியது, இந்த 3 முக்கிய கார்களையும் டிசைன் செய்தது SuperWomen ஆக போற்றப்படும் கிருபா அனந்தன் மற்றும் அவருடைய குழு தான்.

கிருபா அனந்தன் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காம்பாக்ட் எஸ்யூவி மற்றும் மராஸ்ஸோ எம்பிவி ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் மஹிந்திரா பர்சனல் வாகன போர்ட்ஃபோலியோவை விரிவுப்படுத்தியது.
கிருபா ஆனந்தன் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர், இதை தொடர்ந்து ஐஐடி பாம்பே கல்லூரியில் தனது மாஸ்டர் ஆஃப் டிசைன் பட்டப்படிப்பை முடித்தார்.
இதன் பிறகு தான் கிருபா அனந்தன் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் பணியில் சேர்ந்தார். ஆனந்தன் 1997 இல் மஹிந்திரா நிறுவனத்தில் இன்டிரியர் டிசைனராக தனது பணியை தொடங்கினார். 2005 ஆம் ஆண்டில் டிசைன் பிரிவின் தலைவராக (Head of Design) நியமிக்கப்பட்டார், இந்த காலக்கட்டத்தில் தான் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியை வடிவமைத்தார். இந்த பதவியில் மட்டுமே சுமார் 10 ஆண்டுகளுக்குப் பணியாற்றினார்.
இதை தொடர்ந்து கிருபா ஆனந்தன் தலைமை வடிவமைப்பாளராக (Chief Designer) பதவி உயர்வு பெற்றார், அதன் பிறகு தார், XUV 700 மற்றும் ஸ்கார்பியோ ஆகிய மூன்று முக்கிய கார்களின் வடிவமைப்புகளை மாற்றினார். இந்த பதவியில் 2 ஆண்டுகள் பணினார்.

இதன் பிறகு, KRUX ஸ்டுடியோ எனப்படும் தனது சொந்த டிசைன் ஸ்டுடியோவை அமைக்க வேண்டும் என கனவுடன் இப்பதவியை ராஜினாமா செய்தார். KRUX ஸ்டுடியோ இதுவரை Two2 என்ற மைக்ரோ-மொபிலிட்டி கான்செப்ட் வாகனத்தின் டிசைன்-ஐ வெளியிட்டது, அது அப்சைக்கிள் செய்யப்பட்ட பாகங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. KRUX ஸ்டுடியோ உருவாக்கப்பட்டு 1.11 வருடம் ஆனது.
இதே நேரத்தில் கிருபா ஆனந்தன் தமிழ்நாட்டை உற்பத்தி தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் இருசக்கர எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையை தலைகீழாக புரட்டிப்போட்டுள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் டிசைன் தலைவராக பணியாற்ரி வருகிறார் கிருபா ஆனந்தன். ஆட்டோமொபைல் துறை ஆண்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் கிருபா ஆனந்தன் மாஸ் காட்டி வருகிறார்.


Click it and Unblock the Notifications