இன்போசிஸ் நாராயண மூர்த்தியை விட பெரிய ஆள் இவர் தான்.. யார் இந்த கிரிஷ்..!

பெங்களூரு: இன்போசிஸ் நிறுவனம் என்ற உடனே நம் அனைவரின் நினைவுக்கும் வரக்கூடிய பெயர் அதன் இணை நிறுவனரான நாராயணமூர்த்தி. ஆனால் இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனராக இருக்கக்கூடிய ஒருவர் நாராயண மூர்த்தியை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக உருவாகியிருக்கிறார்.

அண்மையில் ஹாரன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024 வெளியானது. இதன்படி இன்போசிஸ் நிறுவனரான நாராயணமூர்த்தி 36, 600 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கிறார் என்றும் இந்தியாவிலேயே 69 ஆவது பணக்காரராகவும் பெங்களூருவில் ஐந்தாவது பணக்காரராகவும் இருக்கிறார் என்றும் தெரிய வந்தது.

இன்போசிஸ் நாராயண மூர்த்தியை விட பெரிய ஆள் இவர் தான்.. யார் இந்த கிரிஷ்..!


ஆனால் இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனராக இருக்கக்கூடிய கிரிஷ் என அன்போடு அழைக்கப்படும் சேனாபதி கோபாலகிருஷ்ணன், நாராயண மூர்த்தியை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கிறார் .

சேனாபதி கோபாலகிருஷ்ணனின் சொத்து மதிப்பு 38,500 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் என பெரும்பாலும் இவர் அறியப்படுகிறார். இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்களும் ஒருவர்.

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், மேலாண் இயக்குனராகவும் செயல்பட்டு வந்தவர். 2007 முதல் 2011 ஆம் ஆண்டு வரை அவர் இந்த பணியில் நீடித்தார். இதனை அடுத்து 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை இன்போசிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக இவர் பொறுப்பு வகித்தார்.

தற்போது 69 வயதாகக்கூடிய கோபாலகிருஷ்ணன் ஆக்சிலார் வென்சர்ஸ் என்ற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த நிறுவனம் குட் ஹோம், என்கேஷ் ஆகிய நிறுவனங்களில் கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளது.

கிரிஷ் கோபாலகிருஷ்ணனை பொறுத்தவரை ஐஐடி மெட்ராஸில் கணினி அறிவியல் படிப்பை முடித்தவர் . இதனை அடுத்து இயற்பியல் பிரிவில் முதுநிலை படிப்பை முடித்தவர். 2011 ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இது இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதாக கருதப்படுகிறது.

கோபாலகிருஷ்ணன் தன்னுடைய மனைவி சுதா கோபாலகிருஷ்ணன் உடன் இணைந்து பிரதிக்ஷா டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவியுள்ளார். இந்த அறக்கட்டளை மூளை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளை செய்பவர்களுக்கும் அது தொடர்பான நிறுவனங்களுக்கும் பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

இன்போசிஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் கோபாலகிருஷ்ணன் ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐஎம் பெங்களூர் ஆகியவற்றின் கவர்னர்கள் வாரியத்தில் ஒரு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

மேலும் ஐடி பெங்களூருவின் கவர்னர்கள் வாரிய குழுவின் தலைவராக இவர் திகழ்ந்து வருகிறார். 1981 ஆம் ஆண்டு ஏழு பொறியாளர்கள் இணைந்து இன்போசிஸ் என்ற ஐடி நிறுவனத்தை தொடங்கினர் . தற்போது இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது இதன் சந்தை மூலதனம் மற்றும் சுமார் 80 பில்லியன் டாலர்களாக உள்ளது.


Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+