கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு செப்டம்பர் 06 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் சிறைச்சாலையில் பிறந்திருந்தாலும், வளர்ந்தது கோகுலத்தில் தான். இந்த சிறப்பு மிக்க நாளில் வீட்டில் குழந்தைகளுக்கு ராதா கிருஷ்ணர் வேடமிட்டு கொண்டாடுவது வழக்கம்.
கிருஷ்ணர் பிறந்க நாள்-ஐ கிருஷ்ண ஜெயந்தியாக பெரும்பாலானவர்கள் கொண்டாடினாலும், யாதவ குலத்தினர் கிருஷ்ணர் கோகுலத்திற்கு வந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி நாள் என்று கொண்டாடும் வழக்கம் உள்ளது. இது எப்படியிருந்தாலும், கிருஷ்ண ஜெயந்தி குழந்தைகளின் விழாவாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் முறையில் ஒவ்வொரு மாநிலத்திலும், சமுகத்திலும் மாறுப்படும். பலர் இந்து மக்கள் இந்த பண்டிகையை கொண்டாடுவது இல்லை என்பதும் நிதர்சனம். இந்த நிலையில் கிருஷ்ணரை வருடம் முழுவதும் கொண்டாடும் ISKCON அமைப்பின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
International Society for Krishna Consciousness என்பதன் சுருக்கம் தான் இந்த ISKCON. லாபம் நோக்கமற்ற அமைப்பாக இயங்கி வரும் இஸ்கான் கிருஷ்ணரை கொண்டாடி, கிருஷ்ணரின் போதனைகளை இந்திய மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முக்கியமான பணியை செய்து வருகிறது.
ISKCON அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரையில் சுமார் 800 கோவில்கள், அமைப்புகள், உணவகங்கள் என பலவற்றை இயக்கி வருகிறது. இந்த அமைப்பு 1966 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் ஏ.சி பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதாவால் நிறுவப்பட்டது.
ISKCON கோவில்கள் அமைப்புகள் ஒவ்வொரு நாடு வாரியாக தனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நிலையில் அதன் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு குறித்து முழுமையாக தெரியாவிட்டாலும் இந்தியா கோவில்களின் சொத்து மதிப்பு குறித்து தோராய மதிப்பீடு உள்ளது.
ISKCON சுமார் 71 நாடுகளில் இயங்கி வருகிறது. இதில் இந்தியாவில் அதிகப்படையான கட்டமைப்புகள் உடன் இயங்கும் அமைப்பாக உள்ளது. இந்தியாவில் சுமார் 400க்கும் அதிகமான கோவில்களை வைத்து இயங்கி வரும் இஸ்கான் இந்தியாவின் மொத்த மதிப்பு 2500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 2.53 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டை ஒப்பிடுகையில் இஸ்கான் கோவிலின் 2500 கோடி ரூபாய் சொத்து மதிப்பு குறைவாக இருந்தாலும் இந்தியாவில் 4வது பெரிய பணக்கார கடவுளாக இஸ்கான் கிருஷ்ணர் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications