பிரதமர் மோடியின் திருச்சி பயணத்தில் பிரதமர் மோடி மொத்தம் ரூ.20,140 கோடி மதிப்பிலான 20 திட்டங்களையும் நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தது மட்டும் அல்லாமல் பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
இதில் முக்கியமான திட்டம் தான் KKBMPL, இந்த மாபெரும் திட்டத்தில் பெரிய அளவில் பலன் பெறுவது தமிழ்நாடு தான், இந்த ஒரு திட்டம் மூலம் உற்பத்தி துறையில் இருந்து குடும்பங்கள் வரையில் பல தரப்பு மக்களின் செலவுகள் குறைவது மட்டும் அல்லாமல் மாநிலத்தின் பணவீக்கம் குறைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மத்திய அரசு நாட்டின் எரிசக்தி தேவையில் இயற்கை எரிவாயு பங்கீட்டை தற்போதைய 6.7 சதவீதத்தை 15 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காகவே கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 3 முக்கிய மாநிலங்களைத் தேசிய எரிவாயு கிரிட்-ல் இணைக்கும் முக்கியமான பைப்லைன் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்தது.
இத்திட்டத்திற்காகக் கொச்சி, குட்டநாட், பெங்களூர், மங்களூர் பைப்லைன் என்ற KKBMPL திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் முதல் பகுதி மங்களூர் முதல் கேரள மாநிலம் குட்டநாட் வரை பைப்லைன் அமைக்கப்படுகிறது. 2வது கட்டத்தில் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டின் 7 முக்கிய மாவட்டங்களைக் கடந்த கேரளாவில் குட்டநாட் உடன் இணைந்து. பின்பு கொச்சி வரையில் நீள்கிறது.
இன்று திருச்சி பயணத்தில் பிரதமர் மோடி சுமார் 294 கிலோமீட்டர் தொலைவிலான கிருஷ்ணகிரி - கோயம்புத்தூர் மத்தியிலான இயற்கை எரிவாயு பைப்லைன் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்தத் திட்டம் மூலம் தமிழ்நாட்டுத் தொழிற்துறைக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன நன்மை..?
இந்தத் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகள், வீடுகள், போக்குவரத்து வாகனங்கள் (CNG வாகனங்கள்) ஆகியவற்றுக்கு மலிவு விலையில் இயற்கை எரிவாயுவைப் பெற முடியும். இத்திட்டத்தில் பெரும் பகுதிகளின் கட்டுமானம் முடிவடைந்துள்ள வேளையில் நவம்பர் 2024 முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.
இத்திட்டம் 2915 கோடி ரூபாயில் அமைக்கப்படும் எனத் துவக்கத்தில் அறிவிக்கும் போது கணக்கிடப்பட்ட நிலையில், தற்போது 5909 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்படும் எனத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. 2012ல் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் நவம்பர் மாதம் 2024ல் முடிக்கப்படும் எனத் தெரிகிறது
294 கிலோமீட்டர் தொலைவிலான கிருஷ்ணகிரி - கோயம்புத்தூர் மத்தியிலான இயற்கை எரிவாயு பைப்லைன் திட்டத்தில் தற்போது கிருஷ்ணகிரி டூ சேலம் வரையிலான பணிகள் நடந்துகொண்டு வருகிறது.
இந்தத் திட்டம் மூலம் தமிழ்நாட்டிலும் பைப் வாயிலாக வீட்டிற்கு எரிவாயு சப்ளை செய்யும் திட்டம் வேகமாக விரிவாக்கம் செய்யப்படும் வாய்ப்புகளும் உள்ளது. மேலும் இந்தத் திட்டத்தை மத்திய அரசின் GAIL நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications