இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் புதன்கிழமை வர்த்தக நேரம் முடிந்த பின்பு தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது, பலரும் கணிப்புகளை உடைத்து சிறப்பான லாபத்தையும் வருவாய் வளர்ச்சியை டிசிஎஸ் மார்ச் காலாண்டில் பெற்றுள்ளது. இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத்தில் டிசிஎஸ் பங்குகள் 1.42 சதவீதம் சரிந்து 3,196.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
மார்ச் 31 ஆம் தேதி முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த லாபம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 14.8 சதவீதம் அதிகரித்து 11, 436 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் மார்ச் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் 16.9 சதவீதம் வளர்ச்சி அடைந்து 59,162 கோடி ரூபாயாக உள்ளது. ராஜேஷ் கோபிநாதன் நிர்வாகத்தில் டிசிஎஸ் லாபம், வருவாய் சிறப்பான முறையில் உயர்ந்துள்ளது என்பதை காட்டியுள்ளார்.

இக்காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் டிசிஎஸ் நிர்வாகத்தின் அறிவிப்பின்படி புதியதாக நியமிக்கப்பட்டு உள்ள கே கிருதிவாசன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராக ஜூன் 1 ஆம் தேதி முதல் தனது பணியை அதிகாரப்பூர்வமாக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதோடு முன்னாள் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் செப்டம்பர் 15 ஆம் தேதி வரையில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக மாற்றத்திற்கு உதவி செய்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜேஷ் கோபிநாதன் டிசிஎஸ் மற்றும் டாடா குழுமத்தில் தொடர்ந்து பணியாற்றுவது குறித்து சந்திரசேகரனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியான நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ராஜேஷ் கோபிநாதன் டாடா குழுமத்தின் பிற முக்கிய பிரிவில் பணியாற்றுவாரா அல்லது ஒட்டுமொத்தமாக வெளியேற உள்ளாரா என்பது குறித்து எவ்விதமான அறிவிப்பும், தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை.

டிசிஎஸ் சிஇஓ-வாக கே கிருதிவாசன் நியமிக்கப்படும் நிலையில் பெரும் மாற்றங்கள் இருக்கும் என ஒருபுறம் கூறப்படும் நிலையில், தற்போதைய மந்தமான வர்த்தக சூழ்நிலையிலும் டிசிஎஸ் நடப்பு நிதியாண்டில் 40000 பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி மீது நிர்வாகத்திற்கு அதிகப்படியான நம்பிக்கை உள்ளது. இதன் வாயிலாக தான் டிசிஎஸ் 40000 ஊழியர்களை பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மார்ச் காலாண்டு முடிவுகளின் படி டிசிஎஸ் நிறுவனத்தில் எப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான அனுபவம் கொண்ட ஊழியர்களை பணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதே காலக்கட்டத்தில் 44 பிரஷ்ஷர்களை டிசிஎஸ் சேர்த்துள்ளது, ஆனால் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையை பார்த்தால் 2023 ஆம் நிதியாண்டில் 22000 ஊழியர்கள் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications