பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு மகிழ்ச்சி.. ராகுல் காந்தி பெயரில் கேஎஸ் அழகிரி பாராட்டி ட்வீட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்டாலின் தலைமையிலான திமுகக் கட்சி ஆட்சிக்கு வரும் முன்பு தனது தேர்தல் வாக்குறுதியில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 5, டீசல் விலை ரூ 3 குறைக்கப்படும். சமையல் எரிவாயுவுக்கான மானியம் ரூ 100 வழங்கப்படும் என அறிவித்தனர்.

 

ஆனால் ஆட்சியைப் பிடித்த 3 மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

 வெள்ளை அறிக்கை வெளியீடு

வெள்ளை அறிக்கை வெளியீடு

இந்நிலையில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன் தமிழ்நாட்டின் நிதிநிலையைப் புட்டு புட்டு வைக்கும் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

 பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல்

பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல்

வெள்ளை அறிக்கை வெளியிட்ட கையோடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் ஒன்றிய அரசின் வரி விதிப்பு, ஜிஎஸ்டி வரி பங்கீடு, தமிழ்நாட்டின் நிதிநிலை ஆகியவற்றை முன்வைத்து பெட்ரோல் விலையை மட்டும் குறைத்து அறிவித்தார்.

 பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு
 

பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு

தமிழ்நாட்டின் நடப்பு நிதியாண்டுக்கான பொதுப் பட்ஜெட் அறிக்கையில், முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும், மக்களின் சுமையைக் குறைக்கவும் பெட்ரோல் மீது மாநில அரசு விதிக்கும் வரி அளவீட்டில் ரூ 3 குறைக்க உத்தரவிட்டார்.

 1160 கோடி ரூபாய் நஷ்டம்

1160 கோடி ரூபாய் நஷ்டம்

இந்த விலை குறைப்பு மூலம் தமிழ்நாட்டு அரசுக்கு சுமார் 1160 கோடி ரூபாய் அளவிலான வரி வருவாய் பாதிப்பு ஏற்படும் என்ற நிலையிலும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது ஸ்டாலின் தலைமையிலான அரசு.

 புதிய பெட்ரோல் விலை

புதிய பெட்ரோல் விலை

இந்தப் புதிய விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த நிலையில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3.02 குறைந்து ரூ 99.47 ஆகவும், டீசல் விலையில் கடந்த 28 நாட்களாக மாற்றமின்றி லிட்டருக்கு ரூ 94.39 விலையில் ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

 கே.எஸ் அழகிரி டிவிட்டர்

கே.எஸ் அழகிரி டிவிட்டர்

தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் குறைத்து மக்களின் சுமையைக் குறைத்ததைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். ஆனால் அதில் ஒரு ஸ்பெஷல்.

 கே.எஸ்.அழகிரி டிவிட்டர் பதிவு

கே.எஸ்.அழகிரி டிவிட்டர் பதிவு

கே.எஸ்.அழகிரி தனது டிவிட்டர் பேஜை ராகுல் காந்தி எனப் பெயர் மற்றும் புகைப்படத்தை மாற்றி வைத்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டு அரசின் இந்த முடிவுக்குக் காங்கிரஸ் வரவேற்பு அளித்துள்ளதாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.

 தமிழக முதலமைச்சருக்குப் பாராட்டு

தமிழக முதலமைச்சருக்குப் பாராட்டு

டிவிட்டரில் கே.எஸ்.அழகிரி தனது டிவிட்டரில், "உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறும் வகையிலும் தமிழகத்தில் 2.63 கோடி இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையிலும் 1லிட்டர் பெட்ரோலில் ரூ.3 வரி குறைத்ததன் மூலம் திமுகக் கொடுத்த வாக்குறுதியை முதல் நிதிநிலை அறிக்கையிலேயே நிறைவேற்றியதற்காகத் தமிழக முதலமைச்சரைப் பாராட்டுகிறேன்" எனப் பதிவிட்டு இருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

KS Alagiri praise Tamil Nadu govt on Rs.3 reduction petrol price in Rahul Gandhi name

President of Tamilnadu congress committee KS Alagiri praise Tamil Nadu govt on Rs.3 reduction petrol price in Rahul Gandhi name
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X