மும்பை: இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான குமார் மங்கலம் பிர்லா அவர்கள் சமீபத்தில் பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் அவர் பேசியபோது, தான் படித்துக்கொண்டிருந்தபோது பாம்பே ஐஐடியில் கேட்ட ஜோக் ஒன்றை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
இந்த ஜோக் குறித்த செய்தி சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குமார் மங்கலம் பிர்லா
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா என்பது அனைவரும் அறிந்ததே. இவர் சமீபத்தில் ஐஐடி மும்பையின் 60 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
தலைமை விருந்தினர்
55 வயதான பிர்லா இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர் அவர் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
தொழில்நுட்ப படிப்பு
மாணவர்கள் தொழில்நுட்பம் குறித்த படிப்பில் மிகவும் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் மும்பை ஐஐடி என்பது மிகவும் சிறப்புக்குரிய தொழில்நுட்ப கல்லூரி என்றும் இதில் படித்த பல மாணவர்கள் தற்போது மிகப்பெரிய அளவில் உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நண்பர்கள்
மேலும் ஐஐடி மும்பை மாணவர்களில் சிலர் தனது நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்றும், அந்த நண்பர்களிடமிருந்து கேட்ட பல ஜோக்குகளை தன்னால் எப்படி மறக்க முடியும் என்றும் அவர் தனது மலரும் நினைவுகளை மாணவர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.
ஜோக்
அவ்வாறு கேட்ட எனக்கு பிடித்த ஜோக் ஒன்று தற்போது ஞாபகம் வருகிறது என்றும், 'ஒரு ஆட்டோ டிரைவர் தனது தொலைந்து போன ஆட்டோவை நெடுநேரம் தேடிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த வளாகத்தில் வெளியேற முடிவு செய்து அங்கிருந்த ஒரு பிஎச்டி மாணவரிடம், 'இங்கிருந்து வெளியேற என்ன வழி என்று கேட்டதாகவும் அதற்கு அந்த மாணவர், 'கடந்த நான்கு வருடங்களாக நானும் அதைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று பதில் கூறியதாகவும் தெரிவித்தார். இந்த ஜோக்கை கேட்டவுடன் மாணவர்கள் மத்தியில் சிரிப்பொலி எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது வெறும் ஜோக்காக இருந்தாலும் இன்று பட்டம் பெறும் நீங்கள் அனைவரும் உங்களுக்கான வழியைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்காது என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2551 பட்டங்கள்
மும்பை ஐஐடி இந்த ஆண்டு மொத்தம் 449 பிஎச்டி பட்டங்களை வழங்கியுள்ளது. இது இந்தியாவில் STEM கல்வியில் இதுவரை இல்லாத மிக உயர்ந்த எண்ணிக்கை என்று கூறப்படுகிறது. மேலும் பிஎச்டி, பிடெக், எம்டெக், எம்எஸ்சி மற்றும் எம்ஃபில் பட்டங்கள் உட்பட, மொத்தம் 2324 மாணவர்களுக்கு மொத்தம் 2551 பட்டங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications