இந்திய சிமெண்ட் உற்பத்தி மற்றும் வர்த்தக துறையில் யார் ஆதிக்கம் செலுத்தப் போகிறார் என்பதில் பிர்லா குழுமத்திற்கும், அதானி குழுமத்திற்கும் பெரும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் இரு வர்த்தக குழுமங்களும் சிறிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களைக் கைப்பற்றி இத்துறையில் மாபெரும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் நடந்து வருகிறது.
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான குமார் மங்களம் பிர்லா தலைமையிலான பிர்லா குழுமத்தின் முதன்மை நிறுவனங்களில் ஒன்றான அல்ட்ராடெக், இந்திய சிமெண்ட்ஸ் நிறுவன பங்குகளை வாங்கிய தொடர்ந்து, ஏற்கனவே துவங்கி இடையில் நிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

ஓரியண்ட் சிமெண்ட் நிறுவனத்தின் உரிமையாளரான (அவரது சித்தப்பா) சி.கே. பிர்லாவுடன் இந்நிறுவனப் பங்குகளை வாங்க இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாத இறுதியில் இந்தியா சிமெண்ட்ஸில் 23% பங்குகளை வாங்கிய பின்னர், தெற்கு மற்றும் மேற்கு சந்தைகளில், குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவில் அல்ட்ராடெக் நிறுவனத்தின் நிலையை மேம்படுத்தவும், அதானி சிமெண்ட் நிறுவனத்திற்குக் கடுமையான போட்டியை அளிக்கவும் குமார் பிர்லா மீண்டும் ஓரியண்ட் சிமெண்ட்டை வாங்க முயற்சிப்பதாகக் தெரிகிறது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தித் திறனைக் கட்டுப்படுத்தும் அதானி சிமெண்ட், கடந்த ஆண்டு இறுதியில் இருந்து சி.கே. பிர்லாவுடன் ஓரியண்ட் சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், ஓரியண்ட் சிமெண்ட் நிறுவனத்திற்கான மதிப்பீட்டை அதானி ஒப்புக்கொள்ளாத காரணத்தால் அதானி - சி.கே. பிர்லா மத்தியிலான பேச்சுவார்த்தை முடிந்தது.
பிர்லா குடும்பம் மற்றும் இக்குடும்பத்திற்குச் சொந்தமான தனியார் முதலீட்டு நிறுவனங்கள் அமைப்புகள் இணைந்து ஓரியண்ட் சிமெண்ட் நிறுவனத்தில் 37.9% பங்குகளை வைத்திருக்கின்றன. கடந்த அக்டோபர் மாதம் சி.கே. பிர்லா அதானியுடன் இணைவதற்கான முயற்சிகள் நடந்தன.
அப்போது ஓரியண்ட் சிமெண்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.3,878 கோடியாக இருந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.6,290.50 கோடியாக உள்ளது.

ஒரு பங்குக்கு ரூ.350-375 விலை வழங்க அல்ட்ராடெக் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்போதைய சந்தை விலையான ரூ.307 ஐ விட 22% அதிகமாகும்.
கடந்த ஒரு மாதத்தில், கையகப்படுத்தல் ஒப்பந்தம் விரைவில் முடிவடையவிருப்பதாகப் பரவிய கணிப்புகளின் காரணமாக, ஓரியண்ட் சிமெண்ட் பங்கு விலை 45% உயர்ந்து ஜூலை 1ம் தேதி ரூ.329 என்ற உச்சபட்ச அளவை எட்டியது. ஓரியண்ட் சிமெண்ட் நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன் ஆண்டுக்கு 8.5 மில்லியன் டன் ஆகும்.
ஓரியண்ட் சிமெண்ட் நிறுவனத்தை பிர்லா - அதானி வாங்குவதற்காக நடக்கும் கடும் போட்டியில் வெறும் 9 மாதத்தில் சி.கே. பிர்லா-வின் ஓரியண்ட் சிமெண்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 மடங்கு அதிகரித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications