இந்திய சிமெண்ட் உற்பத்தி துறையில் கௌதம் அதானி பெரும் ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் அடித்தடுத்து சிமெண்ட்நிறுவனங்களை கைப்பற்றி வரும் வேளையில், திடிரென ஆதித்யா பிர்லா குழுமம் நிறுவனங்களை வாங்கி அதிர்ச்சி அளித்து வருகிறது.
ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமெண்ட் புதன்கிழமை ஜார்க்கண்டில் உள்ள பர்ன்பூர் சிமெண்ட் நிறுவனத்தின் சிமெண்ட் அரைக்கும் கட்டமைப்பை சுமார் 169.79 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறிய அடுத்த 2 நாளில் மீண்டுமொரு நிறுவனத்தை வாங்கியுள்ளது.

ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் நிறுவனம், பிகே பிர்லா குழுமத்தின் கேசோரம் இண்டஸ்ட்ரீஸ் சிமெண்ட் நிறுவனத்தை மொத்தமாக பங்கு பரிமாற்றத்தின் கீழ் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. கேசோரம் இண்டஸ்ட்ரீஸை சுமார் 7,600 கோடி ரூபாய் மதிப்பில், நிறுவனத்தின் கடனையும் சேர்த்து அல்ட்ராடெக் நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் வாயிலாக கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் ஆண்டுக்கு 10.75 மில்லியன் டன் அளவிலான ஒருங்கிணைந்த சிமெண்ட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு தொழிற்சாலைகளை அல்ட்ராடெக் தற்போது கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அல்ட்ராடெக் நிறுவனம் தென்னிந்திய வர்த்தகத்தில் பெரும் ஆதிக்கத்துடன் விரிவாக்கம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
அல்ட்ராடெக் நிறுவனம், கேசோரம் இண்டஸ்ட்ரீஸை பங்கு பரிமாற்றத்தின் கீழ் வாங்க உள்ளதால் பங்குகளின் பங்கீடு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வியாழக்கிழமை அறிவிப்பின் படி கேசோரம் இண்டஸ்ட்ரீஸ் முதலீட்டாளர்களுக்கு 52 பங்குகளுக்கு 1 அல்ட்ராடெக் பங்குகள் அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் 59.7 லட்சம் அல்ட்ராடெக் பங்குகள், கேசோரம் இண்டஸ்ட்ரீஸ் முதலீட்டாளர்கள் பெற உள்ளனர். இதனால் 5400 கோடி ரூபாய் மதிப்பிலான அல்ட்ராடெக் நிறுவனத்தின் 2.2 சதவீத பங்குகள் வெளியேறியுள்ளது. இந்த பங்கு பரிமாற்றம் அடுத்த 9-12 மாதத்தில் முடிவடையும்.
இதேவேளையில் சிகே பிர்லா -வின் ஓரியென்ட் சிமெண்ட் நிறுவன பங்குகளை வாங்க கௌதம் அதானி பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளார். மேலும் அதீத கடன் மற்றும் மோசடி காரணமாக திவாலான ஏபிஜி ஷிப்யார்ட் குழும நிறுவனமான வத்ராஜ் சிமெண்ட் நிறுவனம் விற்கப்படும் வேளையில் இதை வாங்க அதானி குழுமம் பல நிறுவனங்கள் உடன் போட்டிப்போட்டு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications