சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி.. ஏன் அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா என வெளிநாட்டிலும், வெளியூர்களிலும் மாத சம்பளத்தில் பணியாற்றும் பெரும்பாலானோர்-க்கு இருக்கும் ஒரு ஆசை...
சொந்தமாக ஒரு தொழில் துவங்க வேண்டும் என்பது தான். இதில் பல சவால்கள் இருந்தாலும் மெல்ல மெல்ல உயரும் போது இந்த சுமை தெரியாது, அதேபோல் நீண்ட கால அடிப்படையில் பெரிய அளவிலான லாபத்தை அடைய முடியும் என்பது அனைவருடைய நம்பிக்கை.

அப்படி தான் 1909ல் கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் கோவிலில் ஐயர் ஆக இருந்து பின்னாளில் தொழிலதிபராக மாறி, இன்று இவருடைய தலைமுறையினர் இந்த வர்த்தகத்தை பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக சாம்ராஜ்ஜியமாக மாற்றியுள்ளனர். யார் இந்த கும்பகோணத்து ஐயர்..?
கும்பகோணத்தை சேர்ந்த கல்யாணராமா என்பவர் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு சென்று டெக்ஸ்டைல் துறையில் சிறு சிறு வர்த்தகத்தை 1909ல் துவங்குகிறார். பின்னாளில் வர்த்தகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக 1930ல் கேரள மாநிலத்தில் திருச்சூர்-ல் ஒரு டெக்ஸ்டைல் மில் துவங்குகிறார், ஆனால் அடுத்த சில வருடத்தில் கேரள அரசின் புதிய விதிமுறை காரணத்தால் கல்யாணராமா-வின் டெக்ஸ்டைல் மில் அரசால் கைப்பற்றப்படுகிறது.
இந்த மாபெரும் சரிவில் மனம் தளராத கல்யாணராமா இதே திருச்சூர்-ல் துணிக்கடை துவங்குகிறார். இக்காலக்கட்டத்தில் கல்யாணராமா-வின் மகன் சீதாராமா-வும் வர்த்தகத்திற்கு துணை நிற்கிறார். அப்பா மகன் கூட்டணியில் சிறிய துணிக்கடையாக இருந்து அடுத்த சில வருடத்தில் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக மாறுகிறது.
இந்த பயணத்தில் சீதாராமா தனது சொத்துக்கள், வர்த்தகம் அனைத்தையும் தனது 5 பிள்ளைகளுக்கு பிரிந்துக்கொடுக்கிறார். கல்யாணராமா-வின் பேர பிள்ளைகள் மிகவும் குறுகிய காலக்கட்டத்தில் பெரிய அளவிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் பல துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தனர்.

கல்யாணராமா மற்றும் அவரது மகன் சீதாராமா இணைந்து நிர்வாகம் செய்து வந்த ஒரு துணிக்கடை இப்போது கல்யாண் சில்க்ஸ், கல்யாண் சாரீஸ், கல்யாண் கலெக்ஷன், கல்யாண் ஜுவல்லர்ஸ் என விரிவாக்கம் அடைந்துள்ளது. இந்த அனைத்து வர்த்தகமும் தற்போது கல்யாண் குரூப் என்ற தனது தாத்தாவின் பெயர்களில் தற்போது இயங்கி வருகிறது.
சீதாராமா மகன்களான டி.எஸ்.கல்யாணராமன் தற்போது கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாகம் செய்து வருகிறார், டி.எஸ். பட்டாபிராமன் தற்போது கல்யாண் சில்க்ஸ் நிர்வாகம் செய்து வருகிறார், டி.எஸ்.ராமச்சந்திரன் தற்போது கல்யாண் சேரீஸ் நிர்வாகம் செய்து வருகிறார். கல்யாண் குரூப்-ல் Kalyan Developers என்ற மற்றொரு நிறுவனமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications