ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்ட லூலூ குழுமத்தின் தலைவர் எம்.ஏ. யூசுப் அலி, குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் உட்பட 49 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
தெற்கு மங்காஃப் நகரில் 196 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த ஏழு மாடி கட்டிடத்தில் இந்த வாரம் புதன்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 49 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அபுதாபியில் உள்ள லுலு குழுமம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழந்த 49 பேரில், 42 பேர் இந்தியர்கள், அதிலும் முக்கியமாக 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு மற்றும் கேரள அரசும் இதேபோல 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளன.

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வியாழக்கிழமை குவைத் சென்று, தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களை நேரில் சந்தித்தார். காயமடைந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் கேரளா-வை பூர்வீகமாகக் கொண்டு வளைகுடா நாடுகளில் பெரும் வர்த்தகம் சார்ஜ்ஜியம் வைத்திருக்கும் மற்றொரு தொழிலதிபரான ரவி பிள்ளையும் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications