காதி மற்றும் கிராம தொழிற்துறை அமைப்பு இந்திய மக்களுக்குக் காதி பொருட்களைக் கொண்டு சேர்க்கும் விதமாகவும், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் வர்த்தகத் துறையில் கிராம மக்களின் திறன்களைக் கொண்டு செல்லும் முயற்சியாகப் புதிய ஈகாமர்ஸ் தளம் உருவாக்கியுள்ளது.
இந்த ஈகாமர்ஸ் தளத்தில் ஆடை முதல் வீட்டு அலங்கார பொருட்கள் எனச் சுமார் 50,000-திற்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்காகப் பட்டியலிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஊரகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், கிராமம் மற்றும் டவுன் பகுதி மக்களின் திறன் மற்றும் தயாரிப்புகளை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக முதல் முறையாக அரசு ஒரு பிரத்தியேக ஈகாமர்ஸ் தளத்தை உருவாக்கியுள்ளது எனக் காதி மற்றும் கிராம தொழிற்துறை அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்கள் மத்தியில் தற்போது எப்போதும் இல்லாத வகையில் காதி மற்றும் கிராமப்புற தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
குறிப்பாக 2018-19 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் காதி பொருட்களின் தேவை சுமார் 25 சதவீதம் அதிகரித்தது எனக் காதி மற்றும் கிராம தொழிற்துறை அமைப்பின் தலைவர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.
காதி மற்றும் கிராமப்புற தயாரிப்புகளுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் பிரத்தியேக தளம் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் பொருட்களையும், ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களையும் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்தத் தளத்தில் ஆடை, மளிகை பொருட்கள், அழகு சாதனங்கள், வீட்டு அலங்கார பொருட்கள், உடல் நலம் மற்றும் ஆரோக்கியப் பொருட்கள், அடிப்படைத் தேவைகள், பரிசுப் பொருட்கள் எனப் பலவும் விற்பனைக்காகப் பட்டியலிடப்பட்டு உள்ளது.
இந்தப் பிரத்தியேக தளத்தில் இணைய முகவரி : https://www.ekhadiindia.com/
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications