இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான கோடக் மஹிந்திரா வங்கி மீது ஆர்பிஐ விதித்த தடையை தொடர்ந்து மூத்த மற்றும் முக்கியமான அதிகாரி வெளியேறுகிறார். இவ்வங்கியின் சிஇஓ-வாக அசோக் வாஸ்வானி நியமிக்கப்படுவதற்கு முன்பு தற்போது ராஜினாமா செய்த அதிகாரி தான் சிஇஓ-வாக இருப்பார் என்று பேசப்பட்டது.
கோடக் மஹிந்திரா வங்கியின் இணை நிர்வாக இயக்குநராக இருக்கும் கே.வி.எஸ்.மணியன், ஏப்ரல் 30 அன்று வங்கியிலிருந்தும், பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாகவும், இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கிருஷ்ணன் வெங்கட் சுப்ரமணியன் ( KVS மணியன்) முழு நேர இயக்குநர், இணை நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து விலகுகிறார், அவர் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்ததை தொடர்ந்து இது ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது என்று கோடக் மஹிந்திரா வங்கி சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி நிர்வாகத்துக்கு கேவிஎஸ் மணியன் சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தில், "நிதிச் சேவை துறையில் மற்ற வாய்ப்புகளைத் தொடர்வதற்காக கோடக் மஹிந்திரா வங்கியில் எனது பதவிகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன். இதன் விளைவாக, நான் நிர்வாக குழுவிலிருந்தும் விலகுகிறேன்." என தெரிவித்தார்.
கோடக் மஹிந்திரா வங்கியில் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்த KVS மணியன் ஜனவரி மாதம் நடந்த நிர்வாக மறுசீரமைப்பில் பதவி உயர்வு பெற்றார்.
ஆர்பிஐ ஏப்ரல் 24 ஆம் தேதி மாலை வெளியிட்ட அறிக்கையில் கோடக் மஹிந்திரா வங்கி அடுத்து உத்தரவு வரும் வரையில் இவ்வங்கி ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கி சேனல்கள் வழியாக புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கக் கூடாது என்றும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கு கூடாது என்ற முக்கியமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கியின் டெக் தளத்தில் கண்காணிப்பு தொடர்பான பிரச்சனைகளைக் காரணம் காட்டி ரிசர்வ் வங்கி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதேபோல் ஆர்பிஐ கடந்த 2 வருடமாக இவ்வங்கியின் ஐடி தளத்தை ஆய்வு செய்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த பிரச்சனையால் கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாகம், வர்த்தகம், பங்குச்சந்தை என அனைத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
KVS மணியன், வாரணாசியில் உள்ள ஐஐடி கல்லூரி (BHU) முன்னாள் மாணவர் ஆவார், இவர் மின் பொறியியலில் பிரிவில் பட்டம் பெற்றவர் மற்றும் மும்பை ஜம்னாலால் பஜாஜ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் நிதி மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவர், மேலும் அவர் செலவு மற்றும் பணிக் கணக்காளராகவும் உள்ளார்.
கோடக் மஹிந்திரா வங்கியின் துணை நிர்வாக இயக்குனர் சாந்தி ஏகாம்பரம், மணியன் மேற்பார்வை செய்யும் முதலீட்டு வங்கி மற்றும் நிறுவனப் பங்குகள் முதலீடு, சொத்து மறுசீரமைப்பு வணிகங்களை மேற்பார்வையிடுவார்.
அதே நேரத்தில் வங்கியில் புதிதாக நியமிக்கப்பட்ட MD மற்றும் CEO அசோக் வாஸ்வானி மொத்த விற்பனை, வணிக மற்றும் தனியார் வங்கி பிரிவை தனது நேரடி பார்வையில் வைத்திருக்கப் போகிறார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications