மத்திய அரசின் அதிரடி சலுகை கைகொடுக்கவில்லையே.. கொரோனாவை எதிர்கொள்ள பிஎஃப் பணம் கிடைக்குமா...!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், இந்தியாவில் தற்போது 1,637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 38 பேர் கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு பலியாகியுள்ளனர்.

கொரோனாவின் தாக்கம் மேற்கொண்டு பரவாமல் இருக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது.

இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், ஆக இப்படி ஒரு நிலையில் தான் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஊழியர்களுக்கு உதவும் வகையில் பிஎஃப் பணத்தினை எடுக்க சில சலுகைகளை வழங்கியது.

 இனி ATM-ல் ரீசார்ஜ் செய்யலாம்..! கலக்கும் ஜியோ! இனி ATM-ல் ரீசார்ஜ் செய்யலாம்..! கலக்கும் ஜியோ!

வருங்கால வைப்பு நிதியை எடுத்துக் கொள்ளலாம்

வருங்கால வைப்பு நிதியை எடுத்துக் கொள்ளலாம்

கொரோனா பாதிப்பால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்குக்கு கூட கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் தங்களது அவசரத் தேவைக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வந்தது மத்திய அரசு.

பிஎஃப் பணம்

பிஎஃப் பணம்

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவின் போது தேவைபடும் பொருளாதார தேவைக்காக, மக்கள் தொழிலாளர்கள் தங்களின் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டது. மேலும் இந்த அறிவிப்பின் படி, தொழிலாளர்கள் தங்களின் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் இவற்றில் எது குறைவோ அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதனைத் திருப்பிச் செலுத்த தேவையில்லை எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.

மூன்று நாட்களுக்குள் கிடைக்க உறுதி

மூன்று நாட்களுக்குள் கிடைக்க உறுதி

மேலும் இந்த அறிவிப்பில் நீங்கள் இந்த பிஎஃப் பணத்திற்காக பதிவு செய்த மூன்று நாட்களுக்குள் கிடைக்க உறுதி செய்வதாகவும் அறிவித்தது. மேலும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் படி, 60 மில்லியன் வாடிக்கையாளர்களும் புதிய விதிமுறைகளின் படி தங்கள் கணக்கிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என கூறியிருந்தது.

பிஎஃப் தொகையை பெற இதை செய்யுங்கள்

பிஎஃப் தொகையை பெற இதை செய்யுங்கள்

ஆக இந்த பிஎஃப் தொகையினை பெற தொழிலாளர்கள் EPFO இணையதளத்தில்  தங்களது UAN எண்ணை பதிவு செய்து ரகசிய பாஸ்வேர்டை பதிவு செய்து கணக்கிற்குள் செல்ல வேண்டும். அங்கு அங்கு ஆன்லைன் சர்வீசஸ் மற்றும் CLAIM என்ற பிரிவிற்குச் சென்று அதில் Outbreak of pandemic என்பதை தேர்வு செய்தால், ஓடிபி வரும். அதனை பதிவு செய்தால் விதிமுறைகளின் படி தாங்கள் கேட்ட தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதையும் கூட செய்யுங்கள்

இதையும் கூட செய்யுங்கள்

ஆனால் அதற்கு முன்னர் உங்களது வங்கி பாஸ்புக் அல்லது காசோலைகள் ஸ்கேன் செய்து, JPG and JPEG பார்மேட்டில் 100 கேபி முதல் அதிகபட்சமாக 500 கேபி வரை உள்ளவாறு அப்லோடு செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட நிலையில் 3 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என எனத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்திருந்தது.

கேஓய்சி பிரச்சனை

கேஓய்சி பிரச்சனை

ஆனால் கொரோனாவின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க அனைத்து சந்தாதாரர்களும் பெற முடியுமா என்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இரண்டு பிஎஃப் கணக்குகளில் ஒன்றில் கேஓய்சி பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உங்கள் பிஎஃப் பணத்தினை பெறுவதில் சிக்கலானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பிஎஃப் பணியிடங்களின் ஆதரவு இதற்கு தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆதார் வங்கி இணைப்பு இல்லை

ஆதார் வங்கி இணைப்பு இல்லை

மொத்த universal account numbers எண்களில் 44.73% மட்டுமே, வங்கி மற்றும் ஆதார் எண்களை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக அவற்றினை மட்டுமே நிறுவனங்கள் டிஜிட்டல் கையொப்பங்கள் மூலம் அதை அங்கீகரிக்கின்றன. ஆனால் இதுவரை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் சந்தாதாரர்களுக்கு 170.3 மில்லியன் UAN செயலில் அல்லது செயலற்ற நிலையில் வெளியிட்டுள்ளது.

கேஓய்சி பிரச்சனை

கேஓய்சி பிரச்சனை

EPFO இணையதளத்தில் பிஎஃப் பணத்தில் கணிசமான அளவு பணத்தினை எடுத்துக் கொள்ள மத்திய அரசு சில விதிகளை மென்மையாக்கியது. ஆனால் அதிலும் இப்படி ஒரு சிக்கல் இருப்பதால், தொழிலாளர்கள் தங்களால் பணத்தினை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக 43.73% யுஏஎன் கணக்குகள் கேஓய்சி பிரச்சனையை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது சாத்தியமாகுமா?

இது சாத்தியமாகுமா?

ஆக இவர்கள் உடனடியாக அலுவலகங்களின் உதவியுடன் மட்டுமே இதனை சாத்தியமாக்க முடியும். ஆனால் தற்போதைய நிலையில் அது சாத்தியமில்லை எனவும் அத்துறையை சார்ந்த பெயரினை கூற விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாக லைவ் மிண்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

KYC compliance to impede pandemic EPFO withdrawals

Few days ago govt announced EPFO subscribers can withdraw 75% of their savings or up to a maximum of three months' basic pay and dearness allowance from their PF account. But there is in with less than one out of every two EPF accounts being KYC-compliant.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X