ட்விட்டர் நிறுவனத்தினை எலான் மஸ்க் கையகத்திய நிலையில், இது பெரிதாக பேசப்படுகிறதா? என்பது தெரியவில்லை. ஆனால் அதன் பிறகு ட்விட்டரில் நடந்து வரும் மாற்றங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. இன்னும் என்னவெல்லாம் மனுசன் செய்ய காத்திருக்கிறாரோ? ட்விட்டர் ஊழியர்களின் நிலையை நினைத்தால் கொஞ்சம் கவலையாகத் தான் இருக்கிறது எனும் அளவுக்கு உள்ளது.
ட்விட்டரில் நடந்து வரும் இத்தகைய பிரச்சனைகளுக்கு மத்தியில், பல ஊழியர்களும் தாங்களாகவே முன் வந்தே வேலையே வேண்டாம் என கூறி செல்கின்றனராம்.
இன்னும் ஒரு தரப்பு வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் விழுந்து விழுந்து வேலை பார்க்கும் சம்பவமும் அரங்கேறியுள்ளதாம்.
விளம்பரதாரர்கள் குழப்பம்
ஊழியர்கள் தரப்பில் தான் இப்படி எனில், விளம்பரதாரர்கள் தரப்பிலும் குழப்பமே இருந்து வருகின்றது. ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெனரல் மோட்டார் நிறுவனம் தனது விளம்பரத்தினை ட்விட்டரில் இருந்து தடை செய்தது. தற்போது பிரபல நுகர்வோர் பிராண்டான லோரியல் (loreal) நிறுவனமும் அப்படி ஒரு அறிவிப்பினை கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோரியல் மறுப்பு
ஆனால் அதனை அவசர அவசரமாக மறுத்த லோரியல் நிறுவனம், நாங்கள் ட்விட்டரில் விளம்பர நடவடிக்கையில் எந்த தடையையும் விதிக்கவில்லை. இது குறித்து லோரியல் நிறுவனம் எந்த விதமாக முடிவினையும் எடுக்கவில்லை. எங்களுக்கு அப்படி ஒரு எண்ணமும் இல்லை. விளம்பர செலவினங்களையும் குறைக்கும் திட்டம் இல்லை என அவசர அவசரமாக விளக்கம் கொடுத்துள்ளது.
விளம்பரதாரர்களுக்கு சமாதானம்
போலி கணக்குகளின் எண்ணிக்கையும் சுட்டிக் காட்டிய எலான் மஸ்க், ட்விட்டர் முதலீட்டாளர்களையும் தவறாக வழி நடத்துவதாக குற்றம் சாட்டினார். அதோடு விளம்பரதாரர்களுக்கு ஒரு சமாதான குறிப்பினையும் வெளியிட்டிருந்தார். ட்விட்டரை அனைவருக்கும் இலவச காட்சியாக மாற்ற அனுமதிக்க மாட்டேன். இது மேற்கொண்டு கடும் நடவடிக்கைகள் வரலாம் என்பதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்பட்டது. இதற்கிடையில் தான் தற்போது ப்ளூடிக்கிற்கு 8 டாலர்கள் கட்டண முறையும், இன்னும் பல சீர்த்திருத்தங்கள் வரவுள்ளதாகவும் தெரிகிறது.
முக்கிய வருவாய் ஆதாரம்
ட்விட்டரின் வருவாயில் முக்கிய பங்கு வகிப்பது விளம்பரங்கள் தான். எனினும் எலான் மஸ்க் வாங்குவதற்கு முன்னதாக கடந்த மே மாதத்தில் ட்விட்டரின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பின. ட்விட்டர் குறித்த சந்தேகத்தினையும் எழுப்பின.
எலான் மஸ்க் கடிதம்
இதற்கிடையில் தான் எலான் மஸ்க் விளம்பரதாரர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக கடந்த வாரம் ஒரு கடிதத்தினையும் எழுப்பினார். உலகின் மரியாதைக்குரிய விளமபரதளமாக இருக்கும் என்றும் ட்விட்டர் இருக்கும் வேண்டும் என்றும் கூறினார்.
எலான் மஸ்கின் வார்த்தைகள் ட்விட்டரை காப்பாற்றுமா? விளம்பரதாரர்கள் என்ன முடிவெடுக்க போகிறார்கள், பொறுத்திருந்து தான் பார்ப்போமே..


Click it and Unblock the Notifications