ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்ய வேண்டும் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியவர் தான் எல்&டி நிறுவனத்தின் தலைவர் என் சுப்பிரமணியன். அவர் தான் ஏன் அவ்வாறு கூறினேன் என்பது குறித்து தற்போது விளக்கம் தந்திருக்கிறார்.
ஞாயிற்றுகிழமையிலும் வேலை: இந்தியாவின் முன்னணி பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமாக எல்&டி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக எஸ்.என். சுப்பிரமணியன் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் ஊழியர்களுடனான ஒரு ஆலோசனை கூட்டத்தில் பேசிய போது " ஞாயிற்றுக்கிழமை அன்று உங்களிடம் வேலை வாங்க இயலவில்லை என்பதை நினைத்து நான் வருந்துகிறேன்" என தெரிவித்திருந்தார். ஞாயிறு அன்று உங்களிடம் வேலை வாங்க இயலும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என கூறினார்.

சர்ச்சைக்கு விளக்கம்: "ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமை அன்று வேலை செய்கிறேன். எவ்வளவு நேரம் தான் வீட்டில் அமர்ந்திருப்பீர்கள் எவ்வளவு நேரம் தான் உங்களின் மனைவி முகத்தை பார்த்துக் கொண்டிருப்பீர்கள் மனைவிகளும் எவ்வளவு நேரம் கணவரின் முகத்தை பார்த்துக் கொண்டிருப்பார்கள்" என குறிப்பிட்டு இருந்தார். ஊழியர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசிய இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது .
பணிகள் தாமதமானதால் பிரச்சினை: இந்த சூழலில் மணி கண்ட்ரோல் தளத்திற்கு பேட்டி அளித்திருக்கும் எல்&டி தலைவர் மற்றும் மேலாண் இயக்குனரான எஸ் என் சுப்பிரமணியன், ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும் வேலை பார்க்க வேண்டும் என தான் கூறியது ஏன் என்பது குறித்து விளக்கம் தந்திருக்கிறார். அந்த சமயத்தில் பல்வேறு பிரச்சனைகள் என்னுடைய மனதில் ஓடிக்கொண்டிருந்தன, எங்களுடைய ஹை ப்ரொபைல் வாடிக்கையாளர்கள் 5 லிருந்து 6 பேர் வழங்கிய பிராஜெக்ட்டுகள் தாமதமாகி கொண்டிருந்தன . அது ஏன் என்பது குறித்து அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என கூறியுள்ளார்.
வேறு சூழலில் கேட்டிருந்தால்: எங்களால் அந்த சமயத்தில் சரியாக ஊழியர்களையும் தொழிலாளர்களையும் கொண்டு வேலைகளை முடிக்கவில்லை நானே நேரடியாக தலையிட்டும் திட்டமிட்டபடி எந்த வேலையும் முடியாமல் தாமதமாகிறது என நான் மன அழுத்தத்தில் இருந்தேன் ஒரு நிறுவனமாக ஒரு நிறுவன தலைவராக திட்டமிட்டபடி பிராஜெக்ட்டுகள் திட்டமிட்ட நேரத்தில் செல்லாமல் இருந்தது நினைத்து நான் குழம்பிக் கொண்டிருந்தேன் அந்த சமயத்தில் ஒரு ஊழியர் என்னிடம் கேள்வி எழுப்பினர் அதற்கு நான் தற்செயலாக தான் இப்படி ஒரு பதிலை கூறினேன் என தெரிவித்திருக்கிறார்.
பதிவு செய்து வெளியிட்டது தவறு: ஆனால் அந்த ஊழியர் இதனை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவார் என நான் நினைக்கவில்லை. பொதுவாக இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களில் பேசப்படும் தகவல்களை யாரும் பதிவு செய்யக்கூடாது என்பதுதான் நிறுவனத்தின் விதிமுறை அதை மீறி அந்த ஊழியர் செயல்பட்டிருக்கிறார். அதையும் தாண்டி அந்த சமயத்தில் என்னுடைய மனநிலை அப்படி இருந்ததால் தான் அப்படி ஒரு பதிலை கூறினேன். இதே கேள்வியே அவர் வேறொரு சமயத்தில் கேட்டிருந்தால் என்னுடைய பதில் வேறு மாதிரியாக இருந்திருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
என் மனைவியும் வருத்தப்பட்டார்: வழக்கமாக நான் அனைவரிடமும் மிக எளிமையாக பேசக்கூடிய ஒரு நபர்தான் ஆனால் அன்று அவ்வாறு பேசி விட்டேன் என்னுடைய இந்த பேச்சு கேட்டு என்னுடைய மனைவி கூட வருத்தப்பட்டார் ஏனெனில் அவருடைய பெயரும் இதில் வந்தது என கூறி இருக்கிறார் . இந்த கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது அதிலிருந்து அத்தனை எளிதாக வெளிவர முடியவில்லை இருந்தாலும் நடந்தது நடந்து விட்டது இந்த விஷயம் வேறு சமயத்தில் கேட்கப்பட்டிருந்தால் என்னுடைய பதில் வேறு மாதிரியாக இருந்திருக்கும் என விளக்கம் தந்துள்ளார்.எங்கள் நிறுவனத்தை பொறுத்தவரை செயல் திறன் தான் ஆக்ஸிஜன் அதுவே சரியாக இல்லை என்று தான் என்னுடைய மனதை போட்டு ஆட்கொண்டு இருந்தது என பதில் அளித்து இருக்கிறார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications