எல்&டி நிறுவனத்தின் தலைவரும் மேலாண் இயக்குனருமான எஸ். என். சுப்பிரமணியன் இந்தியாவில் வைட் காலர் ஊழியர்கள் தொடங்கி கட்டட தொழிலாளர்கள் வரை வேலை வாய்ப்புக்காக மக்கள் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம் பெயர்வதற்கு விரும்புவதில்லை என கவலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சிஐஐ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ். என். சுப்பிரமணியன் நான் எல்&டி நிறுவனத்தில் பொறியாளராக பணிக்கு சேர்ந்தேன். அப்போது என்னுடைய பாஸ் நீ சென்னையிலிருந்து வருகிறாய் நீ டெல்லி சென்று வேலை செய்ய வேண்டும் எனக் கூறினார். அதே நான் தற்போது சென்னையில் இருக்கும் ஒரு நபரை வேலைக்கு தேர்வு செய்து நீங்கள் டெல்லியில் சென்று பணிபுரிய வேண்டும் என கூறினால் அவர்களே வேலையே வேண்டாம் கூறுகின்றனர் என தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் வைட் காலர் வேலைகள் தொடங்கி கட்டட வேலைகள் வரை வேலை வாய்ப்பு சந்தை முற்றிலும் மாறிவிட்டது, நாம் அதற்கு ஏற்றவாறு மனித வள கொள்கைகளை நெகிழ்வு தன்மை கொண்டதாக மாற்ற வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது என கூறினார். மேலும் இந்தியாவில் தற்போது கட்டட பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது, ஏனெனில் பலரும் தங்களுடைய சொந்த மாநிலங்களை விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று பணிபுரிய விரும்புவதில்லை என கூறினார்.
அந்தந்த மாநிலங்களில் பொருளாதாரம் சிறப்பாக இருப்பது, சொந்த மாநிலங்களில் தொழிலாளர்களுக்கு கிடைக்க கூடிய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சௌகரியம் உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். எந்த நேரத்திலும் 2.5 லட்சம் ஊழியர்களையும் 4 லட்சம் தொழிலாளர்களையும் பணியில் அமர்த்தக்கூடிய வலிமை கொண்ட நிறுவனமாக எல்&டி இருக்கிறது என்றார்.
வேலை வேண்டாம் என கூறி ஊழியர்கள் ராஜினாமா செய்வதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை, ஆனால் தற்போது கட்டட தொழிலாளர்கள் கிடைப்பது தான் சவாலாக இருக்கிறது. தொழிலாளர்களை அழைத்து வந்து வேலை வாங்குவதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன என தெரிவித்தார்.
முன்னதாக எல்&டி தலைவர் சுப்பிரமணியன், ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட பணி புரிய வேண்டும் என கூறி சர்ச்சையில் சிக்கினார். எவ்வளவு நேரம் தான் உங்கள் மனைவியின் முகத்தை பார்த்து கொண்டிருக்க முடியும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் உங்களை வேலை செய்ய வைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது என அவர் கூறினார்.
அலுவலக ஆலோசனை கூட்டத்தில் அவர் தெரிவித்த இந்த கருத்து பெரும் விவாதப் பொருளாக மாறியது. ஊழியர்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை நிறுவன தலைவர்கள் மறந்துவிட்டனர் பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
Story written by: Devika
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications