L&T தலைவர் சம்பளம் ஓரே வருடத்தில் 43% உயர்வு..!!

Larson and Turbo சுருக்கமாக L&T என அழைக்கப்படும் நிறுவனத்தின் தலைவராகவும் மேலாண் இயக்குனராகவும் கடந்த ஆண்டு நியமனம் செய்யப்பட்டவர் எஸ்.என். சுப்பிரமணியம். இவருக்கு கடந்த நிதியாண்டில் 51 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

L&T நிறுவனத்தின் ஆண்டு நிதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மேலான இயக்குனராக செயல்பட்டு வரக்கூடிய எஸ்.என்.சுப்பிரமணியனுக்கு 51.05 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டை காட்டிலும் 43% அதிகம் என நிதி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் குறிப்பிடுகின்றன.

L&T தலைவர் சம்பளம் ஓரே வருடத்தில் 43% உயர்வு..!!

எஸ் என் சுப்ரமணியனுக்கு அடிப்படை ஊதியம் என்பது 3.6 கோடி ரூபாய், இது தவிர ஓய்வூதிய பலன்களாக 10.50 கோடி ரூபாய் மற்றும் கமிஷனாக 35.28 கோடி ரூபாய் மற்றும் பிற பலன்களாக 1.67 கோடி என மொத்தமாக 51. 05 கோடி ரூபாய் அவருக்கு ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு 2023 ஆம் ஆண்டில் 35.67 கோடி தான் சம்பளமாக வழங்கப்பட்டிருந்து. 2024 ஆம் நிதி ஆண்டில் இது 51 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இந்த பதவியை வகித்து வந்த ஏ எம் நாயக் 2024 ஆம் நிதி ஆண்டில் அக்டோபர் மாதத்திற்கு முன்பு வரை 1.69 கோடி ரூபாயை ஊதியமாகவும் ஓய்வூதிய பலன்களாக 1.5 கோடியையும் பெற்றிருக்கிறார்.

1965ஆம் ஆண்டு ஜூனியர் இன்ஜினியராக நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இவர் படிப்படியாக முன்னேறி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குனர் பொறுப்புகள் வரை உயர்ந்தார். இவருக்கு அடுத்ததாக எஸ்.என்.சுப்பிரமணியனுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. அதாவது 1 அக்டோபர் 2023 முதல் இவர் அதிகாரப்பூர்வ மேலாண் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.

1984 ஆம் ஆண்டு L&T யில் பணியில் சேர்ந்த சுப்ரமணியன் ப்ராஜெக்ட் பிளானிங் இன்ஜினியராக தன்னுடைய பணியை தொடங்கினார். குருசேத்ராவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சிவில் இன்ஜினியரிங் பயின்ற இவர் புனேவில் உள்ள சிம்பியாசிஸ் இன்ஸ்டிடியூட்டில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்தார்.

இதனை அடுத்து லண்டன் பிசினஸ் ஸ்கூலுக்கு சென்றவர் எக்ஸிக்யூட்டிவ் மேனேஜ்மென்ட் புரோகிராமை முடித்தார். பின்னர் எல்என்டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி 2011 ஆம் ஆண்டில் வாரிய குழு உறுப்பினராக சேர்ந்தார். பின்னர் 2023 ஆம் ஆண்டு இவருக்கு தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டது.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+