சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் மிகப்பெரிய டேட்டா சென்டரை நிறுவி இருக்கும் எல்&டி நிறுவனம் , இந்த டேட்டா மைந்தத்திற்கான முதல் வாடிக்கையாளர் கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனமாக எல்&டி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பால் பதித்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அண்மையில் இந்த நிறுவனம் டேட்டா சென்டர் தொழிலிலும் களமிறங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் எல்&டி நிறுவனம் தன்னுடைய டேட்டா மையத்தை நிறுவியுள்ளது. எல்என்டி கிளவுட் ஃபினிட்டி என்ற பெயரில் இந்த டேட்டா மையம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
30 மெகாவாட் திறன் கொண்ட இந்த டேட்டா மையம் இரண்டு தளங்களாக கட்டப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முன்னணி கிளவுட் சர்வீஸ் நிறுவனம் ஒன்று தங்களுடைய டேட்டா மையத்தை பயன்படுத்த ஒப்பந்தம் செய்திருப்பதாக எல்&டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி ஆறு மெகாவாட் திறன் கொண்ட தரவுகளை கையாளும் இடத்தை அந்த நிறுவனம் வாடகைக்கு எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது .பத்தாண்டு காலத்திற்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் என எல்&டி நிறுவனம் கூறியுள்ளது.
எல்&டி கிளவுட் ஃபினிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சீமா அம்பாஸ்த்தா எதிர்காலத்தில் இதுபோன்ற பல ஒப்பந்தங்களை எல்&டி கையெழுத்திடும் என கூறியுள்ளார் .இந்தியாவில் டேட்டா சம்பந்தப்பட்ட தொழிலில் முன்னணி நிறுவனமாக எல்&டி உருவாகி வருகிறது எனக் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டின் முடிவில் 3395 கோடி ரூபாய் நிகர லாபத்துடன் இயங்கி வரும் நிறுவனமாக இருக்கிறது எல்&டி இருக்கிறது. இது கடந்த காலாண்டு விட 5.4 சதவீதம் அதிகம் என சொல்லப்படுகிறது.
அதே போல செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருமானம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 51 ஆயிரம் கோடியாக இருந்து நடப்பாண்டில் 61 ஆயிரம் கோடி என அதிகரித்துள்ளது. முன்னதாக எல்&டி நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
இதன்படி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு கட்டமாக 90 மெகாவாட் திறன் கொண்ட டேட்டா மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நேரடியாக 600 பேருக்கும் மறைமுகமாக 500 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எல்&டி நிறுவனம் தெரிவித்தது. இதன் முதல் கட்டமாக ஒரு டேட்டா மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி நவிமும்பை ,பெங்களூரு ஆகிய பகுதிகளிலும் தங்களுடைய நிறுவனம் டேட்டா மையத்தை நிறுவி வருவதாக எல்&டி தெரிவித்துள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications