27% எகிறிய L&T Infotech கம்பெனியின் நிகர லாபம்!

இந்தியாவில் வளர்ந்து வரும் முன்னணி ஐடி கம்பெனிகளில் ஒன்றான எல் & டி இன்ஃபோடெக் (L&T Infotech) கம்பெனியின், செப்டம்பர் 2020 காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

எல் & டி இன்ஃபோடெக் கம்பெனி, இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் 456 கோடி ரூபாயை கன்சாலிடேடட் நிகர லாபமாகக் கணக்கு காட்டி இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 360 கோடி ரூபாயைக் காட்டி இருந்தது. ஆக 26 சதவிகிதம் கன்சாலிடேடட் நிகர லாபம் அதிகரித்து இருக்கிறது.

27% எகிறிய L&T Infotech கம்பெனியின் நிகர லாபம்!

எல் & டி இன்ஃபோடெக் கம்பெனியின் வருவாய் இந்த செப்டம்பர் 2020-ல் 2,998 கோடி ரூபாயாகக் காட்டி இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 2,570 கோடி ரூபாயைக் காட்டி இருந்தது. ஆக 16 சதவிகிதம் வருவாய் அதிகரித்து இருக்கிறது.

கான்ஸ்டண்ட் கரன்சி அடிப்படையில் பார்த்தால், எல் & டி இன்ஃபோடெக் கம்பெனியின் வருவாய், கடந்த காலாண்டுடன் இந்த காலாண்டை ஒப்பிட்டால் 2.3 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. இதுவே கடந்த ஆண்டு செப்டம்பருடன், இந்த செப்டம்பர் 2020-ஐ ஒப்பிட்டால் 10.5 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம்.

எல் & டி இன்ஃபோடெக் ஐடி கம்பெனியின் கையில் டீல்கள் வலுவாக இருக்கின்றனவாம். டிஜிட்டல், க்ளவுட், அனலிடிக்ஸ் போன்ற பிரிவுகளில் அதிக டீல்கள் வந்து கொண்டு இருக்கிறதாம்.

எல் & டி இன்ஃபோடெக் கம்பெனியின் மொத்த வருவாயில் 42.9 சதவிகித வருவாய் டிஜிட்டல் வருவாயாம். இந்த கம்பெனியின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை செப்டம்பர் 2020 நிலவரப்படி 32,455 பேராம். இந்த செப்டம்பர் 2020 காலத்தில் இந்த கம்பெனியில் இருந்து 13.5 சதவிகிதம் பேர் வெளியேறி இருக்கிறார்களாம் (attrition) .

எல் & டி இன்ஃபோடெக் கம்பெனியின் இயக்குநர் குழு, இடைக்கால டிவிடெண்ட்டாக, ஒரு பங்குக்கு 15 ரூபாயை அறிவித்து இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது போக Syncordis Software Services India மற்றும் Ruletronics Systems கம்பெனிகளை இணைத்துக் கொள்வதற்கும் (Merger) இயக்குநர் குழு அனுமதி கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த 2 கம்பெனிகளும், எல் & டி இன்ஃபோடெக் கம்பெனியின் துணை நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+