லார்சன் & டூப்ரோ என்ற நிறுவனம், இந்தியாவின் பொறியியல் துறையில் முன்னணி வகிக்கும் ஒரு பெரிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம், தனது பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் லீவ் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
லார்சன் & டூப்ரோ நிறுவனம், தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் நலனுக்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த புதிய பாலிசியின் மூலம் சுமார் 5000 பெண் ஊழியர்கள் பலனடைய உள்ளனர். இந்த அறிவிப்பை, அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான எஸ்.என். சுப்பிரமணியன், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

லீவ் பாலிசியை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் நிறுவனத்தின் நிர்வாகத்தால் இறுதி செய்யப்படவில்லை. இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு இந்த புதிய பாலிசி L&T-இன் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் இணை நிறுவனங்களான பைனான்சியல் செக்டர் மற்றும் தொழில்நுட்ப செட்டர்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொருந்தாது என்றும் கூறப்படுகிறது. L&T-யில் 60,000 பணியாளர்கள் உள்ளனர். இந்த மொத்த ஊழியர்களில் 9 சதவீதத்தினர் பெண்கள்.
இதற்கு முன்னர் இதே போன்ற பாலிசியை உணவு டெலிவரி துறையில் முன்னணியில் இருக்கும் ஸ்விகி மற்றும் சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் செயல்படுத்தியுள்ளன. இந்நிலையில் தற்போது L&T நிறுவனமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.
2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் L&T நிறுவனத்தின் தலைவரான எஸ்.என். சுப்பிரமணியன் 90 மணி நேரம் வேலை செய்வது குறித்து ஆதரித்து பேசினார். இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவருடைய கருத்துக்கள் ஊழியர்களின் நலன் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அவரது அணுகுமுறையை கேள்விக்குள்ளாக்கியது.
இந்நிலையில் தற்போது பெண்களுக்காக ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் பாலிசியை அறிவித்திருக்கிறார். இந்த லீவ் பாலிசி இந்தியா முழுவதும் உள்ள நிறுவனங்களில் தற்போது பிரபலமடைய தொடங்கியுள்ளது. 2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி புரியும் பெண்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் லீவு பாலீசியை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக ஒடிசா ஆனது.
பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள பெண்களுக்கு வருடத்திற்கு 6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் லீவ் மற்றும் சுகாதார பொருட்களை வழங்கும் மசோதாவை கர்நாடகா அரசு பரிசீலித்து வருகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications