இந்திய ராணுவத்தின் பலம் பல மடங்கு அதிகரிக்க உள்ளது, குறிப்பாக ஆயுத பலம் அதிகரிக்க உள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை கடந்த வாரம் மாபெரும் ஆயுத கொள்முதல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதன் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்புத் துறை லார்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனத்துடன் 7,628 கோடி ரூபாய் மதிப்பிலான 100 தானியங்கி துப்பாக்கிகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 100 K9 வஜ்ரா துப்பாக்கிகள் அதாவது ஆர்டில்லரி துப்பாக்கிகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக லடாக் போன்ற உயரமான பகுதிகளில் இந்த துப்பாக்கிகள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்துள்ளதைத் தொடர்ந்து தற்போது அடுத்தக்கட்ட ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது.

பல துறையில் சிறந்து விளங்கும் லார்சன் & டூப்ரோ பாதுகாப்புத் துறை ஆயுதங்களைத் தயாரிப்பதிலும் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில் பீரங்கி அமைப்பான K9 வஜ்ரா ஆயுதத்தை இந்நிறுவனம் மிகவும் சிறப்பான முறையில் ஹசிசா தொழிற்சாலையில் தயாரிக்க உள்ளது.
K9 வஜ்ரா ஆயுத நீண்ட தூரம், துல்லியமான மற்றும் தாக்கும் கருவியாகும். மைனஸ் டிகிரி உள்ளிட்ட கடுமையான வானிலைகளில் திறம்பட செயல்படும் திறன் கொண்டது இது, இதன் மூலம் சமீப காலத்தில் இது இந்திய ராணுவத்திற்கு மதிப்புமிக்க சொத்தாக மாறியுள்ளது
மத்திய பாதுகாப்பு துறை, லார்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனத்துடனான 7,628 கோடி ரூபாய் மதிப்பிலான 100 தானியங்கி துப்பாக்கிகளைக் கொள்முதல் திட்டம் மூலம் நான்கு ஆண்டுகளில் ஒன்பது லட்சம் பணிநேரம் வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்கும்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறையிடமிருந்து ரூ.13,500 கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், பாதுகாப்புத் துறை பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தியாவின் பாதுகாப்புத் துறை தற்போது நவீனமயமாக்கல் மற்றும் உள்நாட்டில் தயாரிப்பில் முன்னேறி வருவதால், பாதுகாப்புத் துறை பங்குகளில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு ஈர்க்கும் களமாக மாறி வருகிறது.
இந்திய அரசு, பாதுகாப்புத் துறையில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உள்நாட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் விளைவாக, பாதுகாப்புத் துறையில் செயல்படும் நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபம் அதிகரித்து வருகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications