இந்தியாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி என்பது செமிகண்டக்டர் துறையில் இருந்து துவங்கும் என்பது திட்டவட்டமாக தெரியும் வேளையில், சீனாவுக்கு மாற்று இடமாக இந்தியாவை உலக நாடுகள் பார்க்கும் வேளையில் செமிகண்டக்டர் துறையின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது.
ஏற்கனவே இத்துறையில் அமெரிக்காவின் மைக்ரான், இந்தியாவில் டாடா குழுமம் ஆகியவை பெரும் முதலீட்டு உடன் இறங்கியிருக்கும் வேளையில், OSAT பிரிவில் சிறிதும் பெரிதுமாக பல நிறுவனங்கள் நாடு முழுவதும் துவங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் செமிகண்டக்டர் ஃபேரிகேஷன் தொழிற்சாலையை டாடா அமைத்து வரும் வேளையில், இந்தியா செமிகண்டக்டர் டிசைன் துறையில் பெரும் டிமாண்ட் உருவாகியுள்ளது.

இதை கைப்பற்றும் விதமாக எல் & டி குழுமத்திற்கு சொந்தமான துணை நிறுவனம் எல் & டி செமிகண்டக்டர் டெக், சிலிக்கான்ச் சிஸ்டம்ஸ் (SiliConch Systems) என்ற நிறுவனத்தை மொத்தமாக வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, லார்சன் அண்ட் டியூப்ரோ சுமார் ரூ.133 கோடியை முன்பணமாக செலுத்த உள்ளது.
இதை தொடர்ந்து அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.50 கோடியை தவணை செலுத்தப்படும் என்று இந்நிறுவனம் ஜூலை 9 ஆம் தேதியன்று பங்குச் சந்தைககு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிலிக்கான்ச் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம், ஃபேப்லெஸ் (fabless) செமிகண்டக்டர் துறையில் எல் & டி குழுமத்தின் இருப்பை வலுப்படுத்த IP - அறிவுசார் சொத்து, இன்ஜினியரிங் திறமைகள் மற்றும் டிசைன் எக்ஸ்பர்டீஸ் ஆகியவை எல் & டி செமிகண்டக்டர் டெக் நிறுவனத்திற்கு சேர்க்கப்பட உள்ளது.
சிலிக்கான்ச் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் கைப்பற்றல் மூலம் எல் & டி செமிகண்டக்டர் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வது மட்டும் அல்லாமல் இந்தியாவின் செமிகண்டக்டர் பயணத்தில் முக்கிய பங்காற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிஸ்டம்-ஆன்-சிப் IP-யை உருவாக்கும் ஒரு ஃபேப்லெஸ் செமிகண்டக்டர் டிசைன் நிறுவனமாக சிலிக்கான்ச் சிஸ்டம்ஸ் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் 61 ஊழியர்கள் பணிபுரிகின்றனர், மேலும் பல்வேறு பிராந்தியங்களில் 30 காப்புரிமைகள் வைத்துள்ளது. இது செமிகண்டகடர் துறையில் வளர்ந்து வரும் எல் & டி செமிகண்டக்டர் டெக் நிறுவனத்திற்கு பொக்கிஷம் போன்றது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications