சென்னை: எல்&டி நிறுவனம் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் மிகப்பெரிய டேட்டா மையத்தை நிறுவி வருகிறது. தற்போது உலகளவில் டேட்டா மையங்களுக்கான தேவை அதிகரித்து விட்டது. கிளவுட் கட்டமைப்புகள், ஏஐ செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு டேட்டா மையங்களின் தேவை அவசியமாகிவிட்டது.
கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி டெக் நிறுவனங்கள் டேட்டா மையங்களை நிறுவுவதில் ஆர்வம் காட்டுகின்றன. இந்தியாவில் உள்கட்டமைப்பு, பொறியியல் , பராமரிப்பு, ஐடி ஆகிய பல துறைகளில் செயல்பட்டு வரக்கூடிய எல்&டி நிறுவனம் டேட்டா மையங்களை அமைக்கும் பணிகளையும் கையில் எடுத்துள்ளது. தற்போது ஸ்ரீபெரும்புதூரில் அமைய இருக்கும் இந்த டேட்டா மையம் விரைவில் செயல்பட தயாராக இருக்கிறது என எல்&டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எல்&டி நிறுவன மூத்த அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில் இந்த டேட்டா மையத்திற்கான சோதனை பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது எனக் கூறியுள்ளனர். கூடிய விரைவில் அதானி, ஏர்டெல் மற்றும் எஸ்டிடி குளோபல் போன்ற நிறுவனங்களைப் போல சென்னைக்கு அருகே டேட்டா மையம் கொண்ட நிறுவனம் என்ற பெருமை எல்&டிக்கு கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.
எல்&டி நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு நிதி முடிவுகளை வெளியிடும் நிகழ்ச்சியில் பேசிய முதலீட்டாளர்களுக்கான தகவல் தொடர்பு அதிகாரி ராமகிருஷ்ணன் ,சென்னை அருகே 12 மெகாவாட் திறன் கொண்ட டேட்டா மையம் அமைக்கும் பணி நிறைவடைய இருப்பதாக கூறினார்.
கூடிய விரைவில் இது 30 மெகாவாட் திறன் கொண்ட டேட்டா மையமாக மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எல்&டி நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசும் அரசுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு கட்டமாக 90 மெகாவாட் திறன் கொண்ட டேட்டா மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நேரடியாக 600 பேருக்கும் மறைமுகமாக 500 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எல்&டி நிறுவனம் தெரிவித்தது.
இதன் முதல் கட்டமாக தான் தற்போது 12 மெகாவாட் திறன் கொண்ட டேட்டா மையம் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த டேட்டா மையத்திற்கு தடையில்லா மின்சார வசதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி நவிமும்பை ,பெங்களூரு ஆகிய பகுதிகளிலும் தங்களுடைய நிறுவனம் டேட்டா மையத்தை நிறுவி வருவதாக ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications