அரசுகளின் மக்கள் நலத் திட்டங்களால் தொழிலாளர்கள் வேறு மாநிலத்திற்கு சென்று பணிபுரிய விரும்புவதில்லை என எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ். என். சுப்பிரமணியன் கூறி இருப்பது பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
எல்&டி நிறுவனத்தின் தலைவரும் மேலாண் இயக்குனருமான எஸ். என்.சுப்பிரமணியன் தன்னுடைய பேச்சின் மூலம் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். கடந்த மாதம் இவர் எல்&டி நிறுவன ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை செய்ய வேண்டும் என கூறியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் மீண்டும் எடக்கு முடக்காக பேசி இருக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற சிஐஐ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ். என். சுப்பிரமணியன் தற்போது கட்டட தொழிலாளர்கள் வேலைக்கு கிடைப்பதில் பல்வேறு சவால்கள் இருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவில் தற்போது கட்டட பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது, ஆனால் தேவைக்கேற்ப தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என கூறியுள்ளார்.
முன்பை போல தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களை விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று பணிபுரிய விரும்புவதில்லை என தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்புக்காக தொழிலாளர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர மறுக்கின்றனர் என கூறியுள்ள அவர் இதற்கு மாநில அரசுகளும் காரணம் என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் அதை விடுத்து வேறு மாநிலங்களுக்கு செல்ல மக்கள் விரும்புவதில்லை என கூறி இருக்கும் அவர், அரசு நல திட்டங்களும் இதற்கு ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்.
பல்வேறு அரசு நல திட்டங்கள் மூலம் மக்களின் வங்கி கணக்கிற்கே பணம் செல்வதை குறிப்பிட்டுள்ள அவர் , இதனாலேயே தொழிலாளர்கள் தங்கள் இடத்தை விட்டு வெளியேற மறுக்கின்றனர் என்கிறார்.
இது போன்ற திட்டங்கள் அவர்களை சௌகரியமான மனநிலையில் வைத்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழியர்கள் வேலை ராஜினாமா செய்வதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை, ஆனால் தொழிலாளர்கள் கிடைப்பது தான் சவாலாக இருக்கிறது என கூறியுள்ளார்.
எல்&டி (Larsen & Toubro (L&T)) என்பது இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமம் ஆகும். பொறியியல், கட்டுமானம், உற்பத்தி, தொழில்நுட்பம், நிதி சேவைகள் என பல துறைகளிலும் இயங்கி வருகிறது.
இந்தியாவில் பல்வேறு சாலைகள், விமான நிலையங்கள், பாலங்கள், மின்சார உற்பத்தி நிலையங்களை இந்நிறுவனம் கட்டமைத்துள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாலேயே இந்நிறுவனத்தின் தலைவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமாக கவனிக்கப்படுகின்றன.
முன்னதாக சுப்பிரமணியன், ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட பணி புரிய வேண்டும் என கூறி சர்ச்சையில் சிக்கினார். எவ்வளவு நேரம் தான் உங்கள் மனைவியின் முகத்தை பார்த்து கொண்டிருக்க முடியும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் உங்களை வேலை செய்ய வைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது என அவர் கூறினார்.
Story written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications