உலகளவில் பல நிறுவனங்கள் மீண்டும் பணிநீக்க அறிவிப்புகளை மீண்டும் அறிவித்து வரும் வேளையில், இந்தியாவில் சில எட்டெக் நிறுவனங்கள் தவிரப் பெரிய அளவில் யாரும் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடாத நிலையில், நாட்டின் முன்னணி இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான நிறுவனமான L&T குழுமத்தின் டெக்னாலஜி பிரிவு பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
L&T டெக்னாலஜி நிறுவனம் சுமார் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது, மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட 200 ஊழியர்களும் நடுத்தரப் பதவிகளிலும், உயர் பதவிகளிலும் இருப்பவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் செயல்திறன் ஆய்வு சுற்று நடந்தது, இதன் முடிவில் ஒரே பணிக்கு கூடுதல் அதிகாரிகள் இருப்பதை உணர்ந்து role overlaps பிரச்சனையைச் சரி செய்ய 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

L&T குழுமத்தில் 2 டெக் பிரிவுகள் உள்ளது 1. L&T டெக்னாலஜி நிறுவனம் இது இன்ஜினியரிங் பிரிவுக்கான டெக் சேவைகளை அளிக்கிறது. இன்ஜினியரிங், உற்பத்தி, சப்ளை செயின் எனப் பல துறைக்கு டிசைன், டெக் சேவைகளை வழங்கி வருகிறது. 2. L&T இன்பர்மேஷன் டெக் நிறுவனம், இது ஐடி மற்றும் கன்சல்டிங் பிரிவில் இயங்கி வந்தது, 2019ல் Mindtree நிர்வாகத்தைக் கைப்பற்ற முயற்சி செய்து 2022ல் மொத்தமாகக் கைப்பற்றப்பட்டு LTIMindtree ஆக உயர்ந்தது.
இதில் தற்போது பணிநீக்கத்தை அறிவித்தது L&T டெக்னாலஜி நிறுவனம், ஏற்கனவே ஐடி சேவை துறை அதிகளவிலான தடுமாற்றத்தில் இருக்கும் வேளையில் எப்போது எந்த நிறுவனம் பணிநீக்கம் அறிவிக்கும் எனத் தெரியாமல் இருக்கும் இந்த நேரத்தில் இன்ஜினியரிங் டெக் சேவை துறையில் பூகம்பமாக L&T டெக்னாலஜி அறிவிப்பு வந்துள்ளது.
L&T டெக்னாலஜி நிறுவனத்தில் சுமார் 24000 பேர் பணியாற்றி வரும் வேளையில் கிட்டதட்ட ஒரு சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததுள்ளது. இந்தப் பணிநீக்கம் குறித்து இந்நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட தரத்தில் சேவைகளை டெலிவரி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
இதேவேளையில் பிளான்ட் இன்ஜினியரிங், டிஜிட்டல் அண்ட் சாப்ட்வேர் இன்ஜினியரிங், ஏஐ, software defined vehicles பிரிவுகளில் சுமார் 2500 ஊழியர்களைப் பணியில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஜனவரி மாதமும் ஒரு பணிநீக்க சுற்று நடக்கும் என டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது.


Click it and Unblock the Notifications