இந்தியாவை சேர்ந்த பெரிய ஐடி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துகின்றன. பெரும்பாலான துறைகளில் ஏஐ தாக்கம் வந்துவிட்டதால் ஏஐ இணைக்கப்பட்ட செயல்பாடுகளில் அவை கவனம் செலுத்துகின்றன. எனவே புது தொழில்நுட்பங்களை கற்பது , ஏஐ சார்ந்து இயங்கும் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து செயல்படுவது ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளன.
அந்த வகையில் எல்&டிக்கு சொந்தமான ஐடி நிறுவனம் எல்&டி டெக்னாலஜி சர்வீஸ் , கலிபோர்னியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை கையகப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Intelliswift என்ற ஒரு நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது . மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்கி வரும் Intelliswift நிறுவனத்தை எல்&டி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
110 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் இந்த பரிமாற்றம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் எல்&டி நிறுவனம் மென்பொருள் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய பிரிவுகளில் தங்களை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பது தெரிய வருகிறது.
இதன் மூலம் எல்&டி நிறுவனம் ரீடெய்ல் மற்றும் ஃபின் டெக் பிரிவுகளில் சிறப்பாக செயலாற்ற முடியும் என அறிக்கை வெளியீடு செய்துள்ளது. எல்&டி நிறுவனம் தங்களுடைய டிஜிட்டல் இன்ஜினியரிங் பிரிவு வாயிலாக சர்வதேச கிளைண்டுகளை கைப்பற்றும் நோக்கில் தான் அமெரிக்காவை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான நிறுவனத்தை கையகப்படுத்தி இருக்கிறது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆட்டோமேஷன் பணிகளை மேற்கொண்டு வழங்கி வரும் நிறுவனம்.
தற்போது இந்த நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் 25 நிறுவனங்களுக்கு தேவையான டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சேவைகளை வழங்கி வருகிறது. இதில் 10 நிறுவனங்கள் பொறியியல் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவுகளில் இருக்கும் நிறுவனம் ஆகும்.
இதனிடையே எல் &டி டெக்னாலஜிஸ் தலைமை செயல் அதிகாரி, சிலிக்கான் வேலியில் தங்களுடைய இருப்பை வலுப்படுத்துவதற்காகவே இந்த நிறுவனத்தை தாங்கள் கையகப்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார்.
டிசிஎஸ், இன்போசிஸ் ஆகிய முன்னணி டெக் நிறுவனங்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்குகின்றன. அதுமட்டுமின்றி பல்வேறு கிளைண்டுகளுக்கும் அவர்களின் சேவைகளை டிஜிட்டல் சார்ந்தும், ஏஐ சார்ந்தும் மாற்றி வருகின்றன. அந்த வகையில் வளர்ந்து வரும் டெக் நிறுவனமான எல்&டியும் தற்போது ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகளை அதிகப்படுத்தியுள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications