டெல்லி : ஒரே நாடு ஒரே ஊதியம் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தொழிலாளர் நலன்களுக்காக தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் இப்படி ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்த போவதாக திட்டமிட்டிருப்பதாகவும், இது விரைவில் அமல்படுத்தப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் முறைப்படுத்தப்படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே சம்பள தினம் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சந்தோஷ் கங்வார், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பணியில் பாதுகாப்பு, உடல்நலம், ஊதியம் ஆகியவற்றில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட கடுமையான சட்ட திட்டங்களை மத்திய அரசு விதித்துள்ளது. மேலும் தொழிலாலர் நல சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியில் 2014 முதல் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரே நாடு, ஒரே ஊதியம் எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 23, 2019 அன்று OSH கோடு அறிமுகப்படுத்தப்பட்டது. இது பாதுக்காப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான 13 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒரே குறியீடாக இணைப்பதன் மூலம் தொழிலாளர்கள் அதிகரித்தாலும், தனியார் துறையை நெறிப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
அரசு புதிதாக அறிமுகப்படுத்திய OSH கோடு பல புதிய முயற்சிகளைக் கொண்டுள்ளது. கடந்த 2014ல் மோடி அரசு முதல் முறையாக பதவியேற்றதிலிருந்து, தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்துவதில் தொடர்ந்து பணியாற்றி வருவாதாகவும் கங்வார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் 44 சிக்கலான தொழிலாளர் சட்டங்களை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். இந்தச் சட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக மாற்ற அனைத்து தரப்பினருடன் நாங்கள் கலந்து ஆலோசித்து பேசி வருகிறோம் என்றும் கங்வார் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications