இந்தியாவின் மிகப்பெரிய பலமே அதன் மக்கள் தொகை தான். குறிப்பாக மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம். அவர்களை இலக்காக கொண்டு செய்யப்படும் எந்த ஒரு பிஸ்னஸும் கட்டாயம் வெற்றி பெறும். அதற்கு உதாரணமாக இருக்கிறது Lahori zeera.
இந்தியாவின் குளிர்பானங்கள் சந்தை என்பது மிகப்பெரியது. கோகோ கோலா, பெப்சி, கேம்ப கோலா உள்ளிட்ட நிறுவனங்கள் தான் குளிர்பானங்கள் விற்பனையில் முன்னிலையில் இருந்தன. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் தற்போது இந்த பெரிய நிறுவனங்களுக்கு எல்லாம் சவாலாக மாறி இருக்கிறது. Lahori zeera என்பது பஞ்சாப் மாநிலத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படக்கூடிய ஒரு குளிர்பான நிறுவனம் ஆகும்.

இந்தியாவில் நாம் எந்த ஒரு உள்ளூர் கடைகளுக்கு சென்றாலும் இந்த லகோரி நிறுவனத்தின் குளிர்பானங்களை பார்க்க முடியும். குறிப்பாக சீரகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவிற்கே உரித்தான ஃபிளேவர்களில் இவர்கள் விற்பனை செய்யும் குளிர்பானங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். இவர்களின் வாடிக்கையாளர்களே மிடில் கிளாஸ் மற்றும் அதற்கும் கீழ் வருமானம் கொண்டவர்கள் தான்.
எனவே 160 மில்லி பாட்டில் கொண்ட சோடாவை இவர்கள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதுதான் இவர்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் .இந்திய மக்கள் குறைந்த விலைக்கு தரமான பொருளை கொடுத்தால் நிச்சயம் கை கொடுப்பார்கள் என்ற ஒரு தாரக மந்திரமே இந்த நிறுவனம் பெரிய நிறுவனமாக வளர்வதற்கு காரணமாக அமைந்திருக்கிறது .

2017 ஆம் ஆண்டு சிறிய அளவில் தொடங்கப்பட்டு ஒரு நாளைக்கு 96 ஆயிரம் பாட்டில்களை உற்பத்தி செய்ய தொடங்கிய லகோரி ஸீரா நிறுவனம் தற்போது ஒரு நாளைக்கு 5 மில்லியன் குளிர்பான பாட்டில்களை தயாரிக்கிறது. சீரகம் என்பது இந்தியர்களின் உணவில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒன்று. சீரண சக்தி கொண்டது என்பதால் மருந்தாகவும் பயன்படுத்துகிறோம், அதே போல எலுமிச்சை நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இப்படி இந்நிறுவனம் விற்பனை செய்யும் பானங்களில் எல்லாம் இந்தியர்கள் பயன்படுத்தும் உணவுகளில் ஃபிளேவர்கள் இருப்பதால் இது நம்முடைய பிராண்ட் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிந்து விட்டது.
நிகில் டோடா, சௌரப் மஞ்சல், சௌரப் புட்னா ஆகிய மூன்று சகோதரர்கள் பஞ்சாபில் 2017இல் தொடங்கிய நிறுவனம் தான் இது. ஆர்சியன் ஃபுட்ஸ் என்ற பெயரில் இதனை பதிவு செய்துள்ளனர். பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் பல ஆயிரம் கோடி செலவு செய்து பிரபலங்களை கொண்டு தங்கள் பானங்களை விளம்பரம் செய்கின்றன. ஆனால் இந்நிறுவனம் இதுவரை அப்படி விளம்பரத்துக்காக செலவு செய்ததே இல்லை.
தரமான மற்றும் மக்களுக்கு பழக்கப்பட்ட ருசியில் பானங்களை தயாரித்து கிராமங்கள் மற்றும் மூன்றாம் நிலை , இரண்டாம்நிலை நகரங்களை குறிவைத்து தொழிலை தொடங்கினர். தற்போது வெற்றியும் பெற்றுள்ளனர். 2022 ஆம் ஆண்டு பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு முதலீட்டு நிறுவனம் இதன் வளர்ச்சியை உணர்ந்து 15 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது . அப்போதுதான் இந்த நிறுவனம் நமக்கு போட்டியாக வருகிறது என்பதை மற்ற நிறுவனங்கள் உணர்ந்தன.
அண்மையில் கூட இந்த நிறுவனம் மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்திடம் இருந்து சுமார் 200 கோடி ரூபாய் முதலீட்டை இந்நிறுவனம் பெற்றுள்ளது. லகோரி நிறுவனத்தை பொருத்தவரை தற்போதைக்கு ஆறு வகையான குளிர்பானங்களை விற்பனை செய்கிறது. 2023அம் ஆண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 300 கோடி ரூபாயை கடந்தது. இந்த ஆண்டு இதன் வருமானம் 500 கோடியை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications