லட்சத்தீவு-க்கு செல்லும் ரூ.3,600 கோடி.. சாகர்மாலா திட்டத்தில் புதிய டிவிஸ்ட்..!!

மாலதீவுக்கும் - லட்சத்தீவுக்கும் மத்தியிலான போட்டி என்பதைத் தாண்டி இந்தியா - சீனா மத்தியில் புதிய போட்டியாகப் பார்க்கப்படுகிறது. லட்சத்தீவில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதைத் தாண்டி பாதுகாப்பு அளவீட்டிலும் முக்கியமானதாக விளங்குகிறது.

இந்த நிலையில் லட்சத்தீவு வளர்ச்சி தற்போது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதனாலேயே பட்ஜெட் அறிவிப்பில் லட்சத்தீவு சுற்றுலாத் துறை மேம்பாட்டில் முக்கிய இடத்தைப் பெற்று இருந்தது.

லட்சத்தீவு-க்கு செல்லும் ரூ.3,600 கோடி.. சாகர்மாலா திட்டத்தில் புதிய டிவிஸ்ட்..!!

இதைத் தொடர்ந்து லட்சத்தீவில் துறைமுகங்கள், புறவழிச் சாலைகள் மற்றும் கடற்கரையோர வசதிகளுடன் கூடிய சுற்றுலா மையமாக லட்சத்தீவுகளை மேம்படுத்த இந்திய அரசு சுமார் 3,600 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையிலான உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை வகுத்துள்ளது.

லட்சத்தீவுகளில் மிகவும் முக்கியமான பகுதியான ஆந்த்ரோத் (Androth), கல்பேனி (Kalpeni) மற்றும் கடமாட் (Kadamat) தீவுகளில் துறைமுக வசதிகள் உருவாக்கப்பட உள்ளது. கடமத் தீவு (கிழக்கு), அகத்தி தீவு (கிழக்கு), மற்றும் கவரட்டி தீவு ஆகிய இடங்களில் கடற்கரை மற்றும் புறச் சாலைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

லட்சத்தீவு துறைமுக மேம்பாட்டிற்கான மத்திய அரசின் பெரும் கனவுடன் உருவாக்கப்பட்ட சாகர்மாலா திட்டத்திற்கு மத்திய அரசால் ஒதுக்கப்படும் தொகையில் இருந்து தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள திட்டங்கள் மற்றும் பிற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படும் என்று அரசு அதிகாரி கூறினார்.

மத்திய அரசின் தற்போதைய திட்டத்தில் லட்சத்தீவில் இருக்கும் 36 தீவுகளுக்கு 13 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. லட்சத்தீவு அரேபிய கடலில் கேரள கடற்கரையிலிருந்து 220-440 கி.மீ தொலைவில் 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த முதல் இடைக்காலப் பட்ஜெட் உரையில், "உள்நாட்டு சுற்றுலா, துறைமுக இணைப்புக்கான திட்டங்கள், சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகள் லட்சத்தீவுகள் உள்ளிட்ட நமது நாட்டின் பிற தீவுகளில் மேற்கொள்ளப்படும். இது வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் எனக் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதம் முதல் வாரத்தில் லட்சத்தீவுக்குச் சென்று தனது பயணத்தின் புகைப்படங்களைச் சமூக ஊடக தளமான X இல் வெளியிட்டார். இந்தப் பதிவுக்கு மாலத்தீவின் மூன்று துணை அமைச்சர்கள் மோடியைப் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டனர்.

இது சமூக ஊடகத்தில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது, இந்திய மக்கள் மாலத்தீவைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்தது மற்றும் அதற்கு மாற்றாக லட்சத்தீவுகளை முன்மொழிந்தது. இந்தப் பிரச்சனைக்குப் பின்பு சீனா அரசிடம் மாலத்தீவு கூடுதல் நெருக்கமானது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 2015 இல் தொடங்கப்பட்ட சாகர்மாலா திட்டம் மூலம் மோடி தலைமையிலான அரசு நாட்டின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகளை மேம்படுத்த திட்டமிட்டது.

லட்சத்தீவு-க்கு செல்லும் ரூ.3,600 கோடி.. சாகர்மாலா திட்டத்தில் புதிய டிவிஸ்ட்..!!

சாகர்மாலா திட்டம் மூலம் இந்தியாவின் 7,500 கிமீ கடற்கரை, 14,500 கிமீ கடல்வழியாகச் செல்லக்கூடிய நீர்வழிகள் மற்றும் முக்கியச் சர்வதேச கடல்சார் வர்த்தக வழிகளைச் சிறப்பாகவும், மேம்பட்ட முறையில் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறுகையில், சாகர்மாலா திட்டத்தின் கீழ் 4,525 கோடி ரூபாய் மதிப்பிலான 171 திட்டங்களுக்குப் பகுதி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 55 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+