பொதுவாக பணக்காரர்கள் ஆடம்பர கார்கள் வாங்குவது , வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவது என்பன உள்ளிட்ட செயல்கள் மூலமாகவே தங்களின் செல்வ வளத்தை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த பணக்காரங்களிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட ஆடம்பர கப்பலுக்கு சொந்தக்காரராக இருக்கிறார் ஒருவர்.
அவர் முகேஷ் அம்பானியோ அல்லது அனில் அம்பானியோ கிடையாது. யார் அவர்? அவரது சொத்து மதிப்பு என்ன என்று குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்..

ArcelorMittal நிறுவனத்தின் தலைவர் லட்சுமி மிட்டல் ,இவர் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். இந்திய பணக்காரர்களிலேயே அதிக விலை மதிப்பு கொண்டு சொகுசு கப்பலுக்கு உரிமையாளர் இவர்தான். இவரது சொத்து மதிப்பு மட்டும் 1,35,000 கோடி ரூபாய் ஆகும். உலக அளவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களில் ஒருவராக இவர் இடம் பிடித்திருக்கிறார். லட்சுமி மிட்டலை பொருத்தவரை ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் போனவர்.
அமேவி என பெயரிடப்பட்ட இவரது சொகுசு கப்பல் 262 மீட்டர் நீளம் கொண்டது. பல்வேறு ஆடம்பரங்கள் நிறைந்த நவீன வசதிகள் கொண்ட கப்பலாக இது இருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் 1037 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை உலகப் புகழ்பெற்ற வடிவமைப்பாளரான Alberto Pinto , 2007 ஆம் ஆண்டு வடிவமைத்தார். இதனை அடுத்து இத்தாலியை சேர்ந்த உல்லாச படகு தயாரிப்பு நிறுவனமான Nuvolari Lenard இதனை கட்டமைத்து அமேவி என இதற்கு பெயர் சூட்டியது.
நீச்சல் குளம், சினிமா ஹால், ஜிம், மசாஜ் அறை, ஹெலிபேட் என பல்வேறு நவீன வசதிகள் கொண்டிருக்கிறது இந்த அமேவி சொகுசு கப்பல். 16 விருந்தினர்களை தங்க வைக்கும் வசதிகள் கொண்டிருக்கும் இந்த ஆடம்பர கப்பலில் தற்போது 22 பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.
லட்சுமி மிட்டல் 1950 ஆம் ஆண்டு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவர். தற்போது அவருக்கு 74 வயதாகிறது இவருக்கு சொந்தமான ArcelorMittal நிறுவனம் தான் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமாக இருக்கிறது.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியும் லட்சுமி மிட்டலை போலவே முகேஷ் அம்பானியும் 58 மீட்டர் நீளம் கொண்ட ஹார்ஸ் ஷூ என்ற சொகுசு படகை சொந்தமாக வைத்திருக்கிறார் இதன் மதிப்பு 829 கோடி ரூபாய் ஆகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications