இன்றைய காலத்தில் மது குடிப்பது பேஷன் போல் ஆகிவிட்டது, இந்திய மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் மதுவை ருசிப்பவர்களாக உள்ளனர். இப்போது பெண்கள் மத்தியிலும் மது கலாச்சாரம் மெல்ல மெல்ல பரவி வருகிறது.
மது பிரியர்களின் தீராத தாகத்தால் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மதுபான சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அதிகரித்து வரும் மதுபான நுகர்வை மதுபான தயாரிப்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கோடிக் கணக்கில் சம்பாதிக்கின்றனர். அந்த வகையில், 80 வயதான பிரபல மதுபான தயாரிப்பாளர் ஒருவர் இந்தியாவின் புதிய மெகா கோடீஸ்வராக உருவெடுத்துள்ளார்.

இந்தியாவின் பிரபலமான மதுபான தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான ராடிகோ கைதான் தான் அதன் நிறுவனர் லலித் கைதான்-ஐ புதிய மெகா கோடீஸ்வரராக மாற்றியுள்ளது. இவரை பலருக்கும் தெரியாவிட்டாலும் இவரது நிறுவன தயாரிப்புகள் மது பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
8 பி.எம். விஸ்கி, ஓல்ட் அட்மிரல் பிராந்தி, மேஜிக் மொமென்ட்ஸ் ஓட்கா மற்றும் இமயமலை அடிவாரத்தில் தயாரிக்கப்படும் ராம்பூர் சிங்கிள் மாஸ்ட் உள்ளிட்ட தயாரிப்புகள் எல்லாம் ராடிகோ கைதான் நிறுவனத்தின் தயாரிப்புகள் தான்.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.12,743 கோடியும், நிகர லாபமாக ரூ.204 கோடியும் ஈட்டியுள்ளது. குறிப்பிடத்தக்கது. ரூ.22,575 கோடி மதிப்பிலான மதுபான நிறுவன உரிமையாளரான லலித் கைதானின் வாழ்க்கையை கொஞ்சம் பார்ப்போம்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் லலித் கைதான். இவரது தந்தை ஜி.என். கைதான். இவர் கட்டுமானம்,ரியல் எஸ்டேட், மதுபானம் உள்பட பல்வேறு தொழில்களை செய்து வந்தார். இவருக்கு மொத்தம் 4 மகன்கள். அவர்களில் ஒருவர்தான் இன்று பெரும் கோடீஸ்வரராக விளங்கும் லலித் கைதான்.
இவர் அஜ்மீரில் உள்ள மாயோ கல்லூரி மற்றும் செயின்ட் சேவியர் கல்லூரியில் கல்வி படித்தார். 1995ல் அவரது தந்தை தனது குடும்ப வர்த்தகத்தை மகன்களுக்கும் பிரித்து கொடுத்தார். அப்போது லலித் கைதான் மதுபான ஆலையை தனது பங்காக பெற்றார். இந்த ஆலை 1972ல் அவரது தந்தையால் வாங்கப்பட்டது. அது 1970களில் ராம்பூர் டிஸ்டில்லரி மற்றும் கெமிக்கல் நிறுவனம் என்று அறியப்பட்டது. லலித் கைதான் மொத்தமாக ஆல்கஹால் தயாரித்து விற்பனை செய்து வந்தார்.
லலித் கைதான் அஜ்மீர் நகரில் இருக்கும் மாயோ கல்லூரி மற்றும் கொல்கத்தா-வில் இருக்கும் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றவர். இதை தொடர்ந்து பெங்களூரில் உள்ள பிஎம்எஸ் பொறியியல் கல்லூரியில் பொறியியல் இளங்கலைப் பட்டம், அமெரிக்காவின் ஹார்வர்டில் நிர்வாக நிதி மற்றும் கணக்கியல் படிப்பை முடித்துள்ளார்.
1997ல் வர்த்தகத்தில் அதிக ஆர்வமுள்ள அவரது மகன் அபிஷேக் வணிகத்தில் சேர்ந்த பிறகு ராடிகோ கைதான் நிறுவனத்தின் வர்த்தகம் புதிய வடிவம் எடுத்தது. பிராண்டட் பானங்களை தயாரித்து விற்பனை செய்தது. அதிகரித்து வரும் விற்பனை மற்றும் ஹாப்பினஸ் இன் எ பாட்டில் ஜின் உள்ளிட்ட புதிய பானங்கள் அறிமுகம் காரணமாக, இந்த ஆண்டில் ராடிகோ கைதான் நிறுவன பங்கின் விலை 50 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தது.
இந்நிறுவனத்தில் 40 சதவீத பங்குகளை லலித் கைதான் வைத்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.8,300 கோடியாகும். என்னதான் நல்ல லாபம் சம்பாதித்தாலும், மதுபான சந்தையில் இந்நிறுவனம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ஸ்டில்டிஸ்டில்லிங் ஸ்பிரிட்ஸ் இந்தியா மற்றும் ஸ்ட்ரேஞ்சர் அண்ட் சன்ஸ் போன்ற நிறுவனங்கள் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications