1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விருதுநகர் ஜவுளி பூங்கா! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் அங்கே மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இந்திய அளவில் ஜவுளி உற்பத்தியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இதனை மேலும் ஊக்குவிக்க கூடிய வகையில் தான் மத்திய அரசு பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.

1894 கோடி ரூபாய் முதலீட்டில் விருதுநகரில் பிஎம் மித்ரா ஜவுளி பூங்காவை அமைக்க கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு ஒப்புதல் தந்தது. இதற்கான ஒப்பந்தமும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முன்னிலையில் கையெழுத்தானது . விருதுநகர் மாவட்டத்தின் குமாரலிங்கபுரத்தில் இருக்கக்கூடிய சிப்காட் நிலத்தில் இந்த ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் இந்த ஜவுளி பூங்கா அமைந்துள்ளது.

1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விருதுநகர் ஜவுளி பூங்கா! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

ஜவுளி சார்ந்த ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து தொழில்களும் இந்த பூங்காவில் இயங்க இருக்கின்றன. இந்த ஆலை மூலம் 1 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என சொல்லப்படுகிறது. இதற்காக 1052 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவில் வேலை செய்பவர் வசதிக்காக பத்தாயிரம் பேர் தங்கும் வகையிலான தங்குமிடமும் அமைக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது . இந்த தொழில் பூங்காவில் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த சூழலில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் , தமிழ்நாட்டின் ஜவுளி தொழில் முனைவோருக்கு மிகப்பெரிய ஒரு செய்தி எனக் கூறியிருக்கிறார் . விருதுநகரில் பிஎம் மித்ரா பூங்கா பயன்பாட்டுக்கு வருகிறது என கூறி இருக்கும் அவர் பி எம் மித்ரா பூங்கா திறப்புக்கு ரெடியாகிவிட்டது 26 ஆம் தேதியான இன்று முதல் டிசம்பர் 17ஆம் தேதி வரை நிலம் ஒதுக்கீடு நடைபெறும் எனக் கூறியிருக்கிறார் .1052 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பூங்காவில் உலகத்தரமாய்ந்த ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் ஆலைகள் இடம்பெறும் என கூறியிருக்கிறார்.

ஜவுளி உற்பத்திக்கான அனைத்துமே ஒரே குடையின் கீழ் வருகிறது என தெரிவித்திருக்கும் அவர் , இங்கே ஆலை அமைக்க விரும்பும் நிறுவனங்கள் டிசம்பர் 17ஆம் தேதிக்குள் சிப்காட் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜவுளி பூங்கா அமைப்பதற்கு ஒப்புதல்களை அளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி, மத்திய ஜவுளி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+