ரேஷன் கார்டில் 20 பேர்.. சென்னையிலேயே பெரிய குடும்பம் இவங்க தான்..!!

சென்னை: மாநில சிவில் சப்ளைஸ் தரவுகளின் படி, தமிழகத்தில் மிகப்பெரிய குடும்பம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த குடும்பம் சென்னையின் மயிலாப்பூரில் வசிக்கும் குடும்பமாகும். தமிழ்நாட்டின் மிகப் பெரிய குடும்பமாக இந்த குடும்பம் கருதப்படுகிறது.

இந்த குடும்பம் மயிலாப்பூரில் உள்ள அப்பர்சுவாமி கோவில் தெருவில் வசிக்கின்றனர். இந்த குடும்பத்தின் மூத்த உறுப்பினரான 89 வயதான முன்னாள் சென்னை மாநகராட்சி ஊழியர் கூறுகையில், அவருடைய இரண்டு மாடி கட்டிடத்தில் சுமார் 30 உறுப்பினர்கள் வசிக்கின்றனர் என்று கூறியுள்ளார். இந்த பெரிய குடும்பத்தில் உள்ள ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் ஏ.ஆர்.வெங்கடேசன் கூறுகையில், ரேஷன் கார்டில் தனது குடும்பத்தினர் அனைவரின் பெயர்களையும் சேர்க்க படாதபாடு பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

 ரேஷன் கார்டில் 20 பேர்.. சென்னையிலேயே பெரிய குடும்பம் இவங்க தான்..!!


இந்நிலையில், இந்த குடும்பத்திற்கான ரேஷன் அட்டையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 24 பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் வழங்கப்பட்ட அட்டையில் 20 குடும்ப உறுப்பினர்களின் பெயரில், எட்டு பெயர்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. அதை தயார் செய்வதற்கான கார்டு வடிவமைப்பில் சிறிய மாற்றங்களை அதிகாரிகள் செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

வெங்கடேசனின் மகன் வி. கோதண்டம் கூறுகையில், இப்போது எங்கள் வீட்டில் 30 பேர் வசிக்கும் நிலையில் 10 பேரின் பெயர்களை நாங்கள் சேர்க்க வேண்டாம் என முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். 2006ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை, புதிய ரேஷன் கார்டுக்கான அவர்களின் விண்ணப்பம் அனைத்து உறுப்பினர்களும் ஒரே வீட்டு முகவரியாக இருப்பதால் பரிசீலிக்கப்படவில்லை என்பதை கோதண்டம் நினைவு கூர்ந்தார்.

வெங்கடேசன் 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தான் ரேஷன் கார்டைப் பெற்றதையும் நினைவு கூர்ந்துள்ளார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தக் குடும்பம் தொடர்ந்து PDS கடையில் பொருட்களை வாங்கியது. "எங்கள் தற்போதைய வீட்டை எனது தந்தை ராஜரத்னாச்சாரி 1942ஆம் ஆண்டு வாங்கினார். எனக்கு 5 மகன்கள் உள்ளனர், அவர்கள் அனைவரும் வீட்டின் தனித்தனி குடியிருப்பில் வசிக்கின்றனர்," என்றும் வெங்கடேசன் கூறியுள்ளார்.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் 1,312 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 277 கார்டுகள் தென் சென்னையிலும், 255 வட சென்னையிலும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், சென்னையில் பெரிய குடும்பங்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

பல காரணங்களுக்காக தங்கள் மகள்கள் அல்லது மகன்கள் பெயர்களை ரேஷன் கார்டுகளில் இருந்து அகற்ற பெற்றோர் தயங்குகின்றனர். உதாரணமாக, தங்களுடைய மகள் திருமணமாகி வேறு ஊருக்கு சென்றாலோ அல்லது தங்கள் மகனுக்கு திருமணமாகி புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தாலும் கூட, இவர்கள் தங்கள் குழந்தைகளின் பெயர்களை அகற்றுவது இல்லை. இதனால் பல ரேஷன் கார்டு அட்டைகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமலே உள்ளன. சிலர் சர்க்கரை அல்லது பருப்பு வாங்க மட்டும் ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.

2.24 கோடி ரேஷன் கார்டுகளில் சராசரியாக 1.7 கோடி கார்டுதாரர்கள் மாதத்திற்கு ஒரு பொருளையாவது PDS கடைகளில் வாங்குகிறார்கள் என்றும் ரேஷன் கடை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலாப்பூரில் உள்ள இக்குடும்பம், தமிழ்நாட்டின் பாரம்பரியங்களையும், நவீனத்தையும் இணைத்துக் கொண்டு வாழும் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+