உலகின் முன்னணி வன்பொருள் மற்றும் மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள்-ன் கிளவுட் கம்பியூட்டிங் மென்பொருள் வருமானம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்துள்ள காரணத்தால் ஆரக்கிள் நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட மாற்றம், இந்நிறுவனத்தின் நிறுவனரான லேரி எலிசன் சொத்து மதிப்பு ஓரே நாளில் 12 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஆரக்கிள் நிறுவனத்தின் லேரி எலிசன் 119.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளார்.
லேரி எலிசன்
77 வயதாகும் லேரி எலிசன் ஆரக்கிள் நிறுவனத்தில் சுமார் 40 சதவீத பங்குகளை வைத்துள்ளார். மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பர்சனல் கம்பியூட்டர் வர்த்தகத்தில் தீவிரமாக இருந்த நிலையில் ஆரக்கிள் எண்டர்பிரைசர்ஸ் மென்பொருள் துறையில் 1977 முதல் இயங்கி வருகிறது.
தலைமை டெக்னாலஜி அதிகாரி
லேரி எலிசன் 77 வயதனாலும் இன்னுமும் ஆர்க்கிள் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் தலைமை டெக்னாலஜி அதிகாரியாக உள்ளார். ஒரு காலத்தில் லேரி எலிசன், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோர் டெக் உலகை ராஜாவாக ஆண்டது மறக்க முடியாது.
டெஸ்லா பங்குகள்
மேலும் லேரி எலிசன் மொத்த சொத்து மதிப்பில் 75 சதவீதம் ஆரக்கிள் நிறுவன பங்குகளாக உள்ளது, அனைவருக்கும் தெரிந்தது போல் லேரி எலிசன் மற்றும் எலான் மஸ்க் நெருங்கிய நண்பர்கள் ஆவார். டெஸ்லா நிறுவனத்தில் சுமார் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை லேரி எலிசன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளவுட் கம்பியூட்டிங் வர்த்தகம்
வெள்ளிக்கிழமை காலாண்டு முடிவுகளை வெளியிட்ட ஆரக்கிள் நீண்ட காலமாக கிளவுட் கம்பியூட்டிங் பிரிவில் அமேசான், கூகிள், மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இழந்த இடத்தை திரும்பவும் பிடித்துள்ளது. இதன் வாயிலாக ஆரக்கிள் பங்கு விலை 16 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
கிளவுட் சேவை
மேலும் காலாண்டு முடிவுகளை வெளியீடும் கூட்டத்தில் லேரி எலிசன் ஆரக்கிள் கிளவுட் எப்போதும் முடங்காது என்ற உத்தரவாதத்தைக் கொடுக்க முடியும், ஆனால் பிற கிளவுட் சேவைகள் அப்படி இல்லை என வெளிப்படையாகவே சக போட்டி நிறுவனங்களைக் குத்திக்காட்டினார்.


Click it and Unblock the Notifications