இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டான 2000 ரூபாய் நோட்டு-ஐ இந்திய ரிசர்வ் வங்கி பயன்பாட்டில் இருந்து திரும்ப பெறுவதாக கூறி கடந்த 3 மாதங்களாக நாட்டின் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் இது மாற்றப்பட்டு வந்தது. ஆர்பிஐ செப்டம்பர் 30 கடைசி தேதியாக அறிவித்த நிலையில் கடந்த வாரம் அக்டோபர் 7 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றே கடைசி தேதியாகும்.
இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் 2000 ரூபாய் நோட்டு மதிப்பில் சுமார் 12000 கோடி ரூபாய் இன்னும் சந்தை பணப்புழக்கத்தில் உள்ளதாக கூறியது. 2000 ரூபாய் நோட்டு செல்லாது என ஆர்பிஐ அறிவிக்காத நிலையில் எவ்விதமான பிரச்சனை இல்லை என்றாலும் ஆக்டோபர் 8 ஆம் தேதி முதல் எந்த வங்கிகளிலும் 2000 ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படாது.

ஏற்கனவே மக்கள் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவதை மொத்தமாக நிறுத்திவிட்ட போதிலும், கடந்த ஒரு வாரமாக அரசு அமைப்புகளும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதை நிறுத்திவிட்டது. இதனால் இன்று ஒரு நாளுக்குள் 12000 கோடி ரூபாய் வங்கி அமைப்பிற்குள் வருமா என்பது பெரும் சந்தேகம் தான்.
சந்தை கணிப்பின் படி இந்த 12000 கோடி ரூபாய் தொகையில் பெரும் பகுதி வெளிநாடுகளிலும், வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் கையில் இருக்கும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக அண்டை நாடுகளில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ திரும்ப பெறும் முறையை இன்னும் அறிவிக்கவில்லை.
2000 ரூபாய் திரும்ப பெறும் அறிவிப்பில் ஆர்பிஐ மே 19, 2023 அன்று நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 3.56 லட்சம் கோடி ரூபாய். இது செப்டம்பர் 29-ம் தேதி வணிகம் முடிவடையும் போது சுமார் 3.42 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட்டு உள்ளதாக அறிவித்தது.
இந்த நிலையில் ஆர்பிஐ அக்டோபர் 7 ஆம் தேதி வரையில் கால அவகாசம் கொடுப்பதாக அறிவித்த போது சந்தையில் வெறும் 14,000 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாக அறிவித்தது. இந்த நிலையில் நேற்றைய அறிவிப்பில் 12000 கோடி இன்னும் புழக்கத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இன்று ஒரு நாளில் 12000 கோடி ரூபாய் வருமானம் என்றால் வாய்ப்புகள் மிகவும் குறைவு, அதிகப்படியாக 1000 கோடி ரூபாய் கூடுதலாக வங்கி அமைப்பிற்குள் வரலாம். 2000 ரூபாய் செல்லாது என ஆர்பிஐ தெரிவிக்காத நிலையில் 2000 ரூபாய் நோட்டு சட்டப்படி செல்லும், ஆனால் வர்த்தகத்தையில் இதை யாரும் வாங்கமாட்டார்கள்.
இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்கு தீர்வாக அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியாவில் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ஒரு முறை ரூ.20,000/- வரை மாற்றிக்கொள்ளலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதனால் NRI-களும் இந்த சலுகையை பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications