சென்னை: வரி செலுத்துவோர் அனைவரும் தங்களுடைய பான் கார்டை ஆதார் கார்டுடன் மே 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என வருமானவரித்துறை நினைவூட்டலை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் இரண்டு முக்கிய ஆவணங்களாக ஆதார் மற்றும் பான் கார்டுகள் இருக்கின்றன. மோசடிகள் நடக்காமல் தவிர்க்க ஆதாருடன் பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவோர் தங்களது நிரந்தரக் கணக்கு எண்ணை (Permanent Account Number) ஆதாருடன் மே 31, 2024க்குள் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வருமானவரித்துறை தனது அதிகாரப்பூர்வ X பிளாட்ஃபார்மில் அறிவித்துள்ளது. அதன்படி ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க இன்று கடைசி நாள்.

வெளியான X அறிவிப்பில் வருமான வரித்துறை கூறியிருப்பதாவது, "வரி செலுத்துவோர் கவனத்திற்கு, மே 31, 2024க்கு முன் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவும். மே 31 ஆம் தேதிக்குள் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது, பிரிவு 206AA மற்றும் 206CC இன் கீழ் அதிக வரி செலுத்த வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தக் காலக்கெடுவை தவற விட்டவர்கள், அதிக வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவுகள் 206AA மற்றும் 206CC இன் படி அதிக வரி வசூல்களுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், வரி செலுத்துதலில் (TDS) அதிகரிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். பான்-ஆதார் இணைப்பு செய்யப்படாத சந்தர்ப்பங்களில், வரி செலுத்துபவர் (Deductor) தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் அதிக வரி (TDS) செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதன் காரணமாக, உங்கள் கைக்கு கிடைக்கும் தொகை குறைந்துவிடும். பின்னர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது, உரிய ஆவணங்களுடன் TDS தொகையைக் கோரி திருப்பிப் பெற வேண்டியிருக்கும். ஆதார்-பான் இணைப்பு என்பது ஒரு எளிமையான செயல்முறை. இணையதளம் அல்லது வங்கி கிளை வழியாக இதை இணைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் வரி ஏய்ப்பு மற்றும் கள்ளப்பணத்தைத் தடுப்பதோடு, வரி செலுத்துதலில் திறம்பட இருக்க முடியும்
பான்-ஆதார் இணைப்பை செய்யாதவர்களுக்கான டிடிஎஸ் தொகை 2 மடங்காக பிடித்தம் செய்யப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் வருமானவரித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது எப்படி?:
ஸ்டெப் 1: வருமான வரித்துறையின் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: 'Quick Links' பிரிவின் கீழ், 'Link Aadhaar' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண்ணை என்டர் செய்து, 'Validate' என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை என்டர் செய்து, 'Link Aadhaar' என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ என்டர் செய்து, செயல்முறையை முடிக்க, 'Validate' என்பதைக் கிளிக் செய்யவும்.
பான் மற்றும் ஆதார் லிங்க் ஸ்டேட்டஸ்-ஐ எவ்வாறு சரிபார்ப்பது?:
ஸ்டெப் 1: https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: 'Quick Links' பிரிவின் கீழ் 'Link Aadhaar Status' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் பான் நம்பர் மற்றும் ஆதார் நம்பரை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 3: லிங்க் ஸ்டேட்டஸ்-ஐ சரி பார்க்க, 'View Link Aadhaar Status' என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications