சர்வதேச அளவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சர்வதேச சந்தைகள் படு வீழ்ச்சி கண்டு வருகின்றன. ஏற்கனவே பல நாடுகளுக்கு படையெடுத்துள்ள கொரோனாவால் படு வீழ்ச்சி கண்டுள்ள பங்கு சந்தைகள், சவுதி அரேபியாவின் ஒத்த அறிவிப்பால், நேற்றைய பங்கு சந்தையில் பல ஆயிரம் கோடி டாலர்கள் காணமல் போயின.
இதனை குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் ப்ளும்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸில் உள்ள உலகின் 500 பணக்காரர்கள், நேற்றைய முற்பகலில் (அரை நாளில்) 203 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
20 வருடத்தில் இல்லாத அளவுக்கு விலை சலுகையில் கிடைக்கும் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். ஆக சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பு கச்சா எண்ணெய் விலையில் பெரிய விலை யுத்தத்தினையே உருவாக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
எண்ணெய் விலை படு வீழ்ச்சி
சவுதியின் இந்த அதிரடியான அறிவிப்புக்கு பின்னர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிட்டதட்ட 30% வீழ்ச்சி கண்டது. குறிப்பாக திங்கட்கிழமையன்று காலை வர்த்தக்கத்தில் WTI கச்சா எண்ணெய் விலையானது தற்போது 31.06% வீழ்ச்சி கண்டு, பேரலுக்கு 28.46 டாலர்களாகவும் வர்த்தகமாகியது. இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 28.65% வீழ்ச்சி கண்டு பேரலுக்கு 32.31 டாலர்களாக வர்த்தகமாகியது. .
வர்த்தக போர் எழும் அச்சம்
கடந்த 1991ல் அமெரிக்கா ஈராக் போருக்கு பிறகு இப்படி எண்ணெய் விலை படு வேகமாக வீழ்ச்சி கண்டன. அது உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் இடையே கூட ஒரு பெரிய விலைபோருக்கு தூண்டியது. இதுபோல சவுதியின் இந்த திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வந்தால், ஒட்டுமொத்த எண்ணெய் உற்பத்தியாளார்களின் நிலையும் கேள்விக்குறித்தான் என்ற நிலையில் விலை இப்படி வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.
அச்சத்தில் சந்தை
அதிலும் ஏற்கனவே கொரோனா அச்சத்தால் உலக அளவில் நிலவி வரும் நிதி நெருக்கடிக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில் சவுதியில் இந்த அறிவிப்புக்கு பின்னர் மீண்டும் படு வீழ்ச்சி கண்டுள்ளது. இது உலகப் பணக்காரர்களின் சொத்தையும் பதம் பார்த்தது என்றால் அது மிகையாகாது. இது 1991ல் இருந்தது போல விலைபோரை மீண்டும் கொண்டு வந்துவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
எண்ணெய் ஜாம்பவான்கள் இழப்பு
அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபரும், எண்ணெய் மற்றும் கேஸ் வர்த்தகத்தில் உள்ள டாப் பில்லியனரான ஹரோல்ட் ஹாம் நியூயார்க் சந்தையில் கால 11.06 மணிக்கு Wildcatter Harold Hamm's சந்தை மதிப்பு 35% வீழ்ச்சி கண்டு 3 பில்லியன் டாலர் வீழ்ச்சி கண்டது. அவரை தொடர்ந்து மற்றொரு எண்ணெய் ஜாம்பவான் ஆன ஜெஃப் ஹில்டெபிரான்ட் தனது இடத்திலிருந்து வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆசிய பணக்காரர் முகேஸ் அம்பானிக்கும் இழப்பு
அதே நேரத்தில் லுகோயில் பிஜேஎஸ்சி நிர்வாகிகள், லியோனிட் ஃபெடூன் மற்றும் வாகிட் அலெக்பெரோவ் ஆகியோ இணைந்து 5 பில்லியன் டாலர்களை இழந்துள்ளனர். இதே ஆசியாவின் பணக்காரரான முகேஷ் அம்பானி 5.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். இதே ஆடம்பர பொருட்களின் நிறுவனமான LVMH நிறுவனத்தின் தலைவரான பெர்னார்ட் அட்னால்ட் 4.2 பில்லியன் டாலர் வீழ்ச்சியுடனும் இருந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கும் பெரிய இழப்பு தான்
இதையடுத்து அமேசான்.காம் இன்க் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் மற்றும் பெர்ஷயர் ஹாத்வே இன்க் இன் வாரன் பபெட் 4.4 பில்லியன் டாலர் பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கார்னிவல் கார்ப்பரேஷன் தலைவர் மிக்கி அரிசனின் பங்கு மதிப்பானது 16% குறைந்து 2.1 பில்லியன் டாலர் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடரும் அழுத்தம்
இந்த நிலையில் அமெரிக்காவின் முதல் 96 நிமிட வர்த்தகத்தின் மூலம் உலகின் 500 பணக்காரர்கள் மொத்தம் 203 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அக்டோபர் 2016-லிருந்து தினசரி இழப்புகளில் இது மிகப்பெரிய இழப்புகள் ஆகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பரவி இருக்கும் வைரஸ் காரணமாக நிதிச் சந்தைகளில் அழுத்தம் காணப்படுகிறது. ஆக இந்த அழுத்தம் மற்ற சந்தைகளிலும் காணப்படும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications