இந்தியாவில் ஐடி சேவையில் முதல் நிறுவனமாக இருக்கக்கூடிய டாடா குடும்பத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனத்திற்கு தற்போது ஒரு சிக்கல் எழுந்திருக்கிறது. ஐடி துறை மந்தம் காரணமாக டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 2 சதவீதம் பேர் அதாவது 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது.
டிசிஎஸ் பணிநீக்கம்: டிசிஎஸ் நிறுவனத்தின் பணி நீக்கம் நடவடிக்கை ஒட்டுமொத்த ஐடி துறையையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது . இதற்கிடையே டிரெய்னீ ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கிறது என்ற ஒரு தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது டிசிஎஸ் நிறுவனத்தில் வேலையில் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற நிறுவனங்களில் இருந்து டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அனுபவமிக்க ஐடி நிபுணர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

டிசிஎஸ் மீது புகார்: டிசிஎஸ் நிறுவனம் கிட்டதட்ட 650 அனுபவமிக்க ஐடி நிபுணர்களை வேலைக்கு தேர்ந்தெடுத்து இருக்கிறது. இவர்களுக்கான ஆஃபர் லெட்டரை வழங்கி விட்டாலும் இதுவரை ப்ராஜெக்டுகளும் அவர்கள் வேலையில் சேர வேண்டிய தேதி உள்ளிட்டவையும் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக இந்த ஊழியர்கள் தொழில்துறை அமைப்பிடமும் புகார் தெரிவித்து இருக்கின்றனர். டிசிஎஸ் நிறுவன வேலையை நம்பி ஏற்கனவே பார்த்து வந்த வேலையை விட்டு விட்டோம் நிதி ரீதியாக எங்களுக்கு தற்போது பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன என புகார் கூறுகின்றனர்.
குழப்பத்தில் ஊழியர்கள்: பணிநீக்கம், கட்டாய ராஜினாமா உள்ளிட்ட தகவல்கள் அனுபவம் மிக்க தொழில் நிபுணர்களை தற்போது குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனம் இவர்களை ஜூலையில் இருந்து செப்டம்பர் மாதத்திற்குள் வேலையில் அமர்த்துவது என முடிவு செய்திருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது பெரும்பாலானவர்களுக்கு இதுவரை எந்த ப்ராஜெக்ட்டும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலையில் சேர்க்காமல் தாமதம்: டிசிஎஸ் நிறுவனம் தொழில் தேவையை அடிப்படையாகக் கொண்டுதான் இவர்களுக்கான வேலைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்திருக்கிறது . இது டிசிஎஸ் இல் ஆஃபர் லெட்டர் பெற்ற அனுபவமிக்க ஐடி நிபுணர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்திருக்கும், டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைக்கு ஆஃபர் லெட்டர் பெற்ற நபர் டிசிஎஸ் நிறுவனத்தை நம்பி நான் என்னுடைய வேலையை விட்டுவிட்டேன். என்னுடைய நோட்டீஸ் காலமே முடிந்துவிட்டது வேலை இல்லாமல் என்னால் ஒரு மாதம் கூட இருக்க முடியாது, எனவே நான் என்னுடைய பழைய நிறுவனத்தின் மேலாளரிடம் பேசி ராஜினாமாவை திரும்ப பெற்றுக் கொண்டு மீண்டும் அங்கேயே வேலை செய்ய தொடங்கி விட்டேன் என கூறியுள்ளார்.
டிசிஎஸ்-ஐ நம்ப முடியவில்லை: பெரும்பாலான நபர்களுக்கு அவர்களின் பழைய நிறுவனம் ராஜினாமாவை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கவில்லை இதனால் அவர்கள் அனைவரும் தற்போது பெரிய சிக்கலில் தவித்து வருகின்றனர். மற்றொரு நபர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் டி சி எஸ் நிறுவனம் என்னை வேலைக்கு தேர்ந்தெடுத்து ஆஃபர் லெட்டர் வழங்கியது ஆனால் இன்னும் எனக்கான ப்ராஜெக்ட் நான் வேலை செய்ய வேண்டிய தேதியோ அறிவிக்கப்படாமலே இருக்கிறது .எனவே நான் உங்களுக்கு பழைய நிறுவனத்திற்கு செல்லலாம் என நினைக்கிறேன் என்னுடைய வேலையையாவது காப்பாற்ற வேண்டும் என விரும்புகிறேன் எனக் கூறியிருக்கிறார்.
வேலையில் சேர்க்காமல் தாமதம்: டிசிஎஸ் ஹெச் ஆர் தன்னை தொடர்பு கொண்டு பேசினர் எப்பொழுது வேலையில் சேரலாம் என்ற தேதியை கேட்டால் அது தொடர்பாக எந்த உறுதியான தகவலும் வழங்காமல் தவிர்க்கின்றனர் என ஒரு பொறியாளர் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் என கூறுகிறார்கள் ஆனால் எந்த தேதி என உறுதியாக தெரிவிக்காமல் தவிக்கின்றனர் என கூறியிருக்கிறார்.
ஒரு நபர் அளித்துள்ள பேட்டியில் ஜூலை 1ஆம் தேதியே நான் வேலையில் சேர்ந்திருக்க வேண்டும் ஆனால் திடீரென ஹெச் ஆர் அக்டோபர் மாதம் வரை இதனை தள்ளி வைத்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர், ஆனால் அதுவும் எனக்கு சந்தேகமாக தான் இருக்கிறது என கூறியிருக்கிறார் .
More From GoodReturns

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications