2024-ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான தற்போதைய வட்டி விகிதங்கள் தான் தொடரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அதாவது இந்தக் காலாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான தற்போதுள்ள வட்டி விகிதங்கள் மாறாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காலாண்டுக்கு ஒருமுறை அரசு மாற்றியமைக்கும்.
ஆனால் இந்த காலாண்டிலும், போன காலண்டிலும் வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமும் இல்லாமல் உள்ளது. இது வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்த்த முதலீடாளர்களுக்கு சற்று கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.

அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் (POTD), மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ், மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) ஆகியவை அடங்கும்.
2024 முதல் 2025-ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31, 2024 அன்று முடிவடையும் வரை 2-வது காலாண்டில் அறிவிக்கப்பட்டவற்றில் இருந்து மாறாமல் இருக்கும் என்று நிதி அமைச்சகம் செப்டம்பர் 30, 2024 அன்று தேதியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் 2024 வரையிலான காலாண்டிற்கான அஞ்சல் அலுவலகத் திட்டங்களின் வட்டி விகிதங்கள்:
சேமிப்பு கணக்கின் வட்டி விகிதம்: 4%
1 வருட டேர்ம் டெபாசிட்: 6.9%
2 வருட டேர்ம் டெபாசிட்: 7%
3 வருட டேர்ம் டெபாசிட்: 7.1%
5 வருட டேர்ம் டெபாசிட்: 7.5%
5 வருட ரெக்கரிங் டெபாசிட்: 6.7%
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: 8.2%
மாதாந்திர வருமானத் திட்டம்: 7.4%
தேசிய சேமிப்புச் சான்றிதழ்: 7.7%
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்: 7.1%
கிசான் விகாஸ் பத்ரா: 7.5%
சுகன்யா சம்ரித்தி யோஜனா: 8.2%
சிறுசேமிப்பு திட்டங்கள் முதலீடு செய்ய ஆர்வமுள்ள தனிநபர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த திட்டங்கள் மத்திய அரசின் ஆதரவுடன் வழங்கப்படுகின்றன. அதில் NSC, SCSS, PPF போன்ற சில திட்டங்கள் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி சேமிப்புகளை வழங்குகிறது. ஒவ்வொரு காலண்டிலும் சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் தொடர்ந்து மதிப்பிடுகிறது.
டிசம்பர் 31, 2023 அன்று முடிவடைந்த காலாண்டில் சில தபால் அலுவலகத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்தது. ஏப்ரல்-ஜூன் 2020 காலாண்டில் இருந்து பொது வருங்கால வைப்பு நிதிக்கான (பிபிஎஃப்) வட்டி விகிதம் 7.1 சதவீதமாக நிலையானதாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications